Header Ads



வடமாகாண மக்கள் இராணுவத்தினரை அகற்றும்படி ஒருபோதும் கூறவில்லை

AD

யாழ்ப்பாணத்தில் மக்கள் சனத்தொகை 5 லட்சம் எனவும் அங்கு நிலைகொண்டுள்ள படைகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் எனவும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இந்தியாவின் இக்கொனமிக் என்ட் பொலிடிகள் வீக்லி சஞ்சிக்கை வெளியிட்ட கணிப்பீட்டுத் தகவலை நிராகரித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் ஒவ்வொரு ஐந்து பொது மக்களுக்கும் ஒரு பாதுகாப்பு படை வீரர் காணப்படுவதாக இந்தியாவில் இருந்து வெளிவரும் இகொனமிக் என்ட் பொலிடிகள் வீக்லி (Economic and Political Weekly) என்ற சஞ்சிகை கணிப்பீட்டுத் தகவல் வெளியிட்டது.

பாதுகாப்புச் செயலாளர், அரசாங்க மற்றும் இராணுவ இணையங்களில் இருந்து பெற்றுக் கொண்ட தகவலின்படி வடக்கில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளதாக அந்த சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினருக்கும் வடக்கு மக்களுக்கும் இடையில் விசேட தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, இராணுவத்தினரை அகற்றும்படி வடக்கு பொது மக்கள் யாரும் கூறவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரிடம் இருந்து பாரிய எதிர்ப்பார்ப்புக்களுடன் உள்ள வடக்கு மக்கள் எந்தவொரு பிரச்சினையின் போதும் பொலிஸ், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட வேறு இடங்களுக்குச் செல்லாமல் அருகில் உள்ள இராணுவ முகாமுக்கே வருவதாகவும் அது இராணுவத்தினர் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிந்து சமாதானத்தை ஏற்படுத்த படையினர் நிலைகொண்டுள்ளதுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதால் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.