Header Ads



பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என்னை அச்சுறுத்தினார் - கோத்தாபய



ஞாயிறு பத்திரிகையொன்றின் ஆசிரியர் தன்னை அச்சுறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் உங்களுக்கு இதனையெல்லாம் செய்வோம் என்று குறித்த பத்திரிகை ஆசிரியர் கூறியிருப்பது என்னை மிரட்டுவதற்கு நிகரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

'நீங்கள் இதனைச் செய்துள்ளீர்கள், எங்களிடம் இது உள்ளது, இதனால் நாம் உங்களுக்கு எதிர்காலத்தில் இதனையெல்லாம் செய்வோம்' என்று மிரட்டியுள்ளார்.

குறித்த பத்திரிகை ஆசிரியர் இவ்வாறு கூறுவதனை ஊடகதர்மமாக கருத முடியாது, அதனை எனக்கு விடுத்துள்ள அச்சுறுத்தலாகவோ அல்லது  மிரட்டலாகவோ தான் கருத வேண்டும்.

எந்தவொரு நபரும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம்செய்ய முடியும். அந்த வகையில் ஊடகவியலாளர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை குறித்த பத்திரிகை ஆசிரியர் அச்சுறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.  

அண்மையில் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரை சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் அவதூறான முறையில் தன் இஸ்டத்திற்கு ஏற்றது போல பேசியதாகவும் அதனைக் கண்டித்து கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமும் நடாத்தப்பட்டது.

அத்துடன் பாதுகாப்புச் செயலாளரது இவ்வாறான பெறுப்பற்ற தன்மைகளினால் அவர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐ.தே.க கோரிக்கை விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.