சீனாவின் ஆட்சி இலங்கைக்கு பலமாக அமைந்திருந்தது - பிரதமர் டி.எம்.ஜயரத்ன
மொஹமட் ஹபீஸ்
அண்மைகாலத்தில் பொருளாதார ரீதியல் இலங்கைக்கு உதவி செய்த நாடுகளில் சீனா முதலிடத்தைப் பெறுவதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சீன- இலங்கை நட்புறவுச்சங்கம் ஒழுங்கு செய்த கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 55 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இவ் வைபவம் ஒழுங்கு செய்யப் பட்டிருந்துது. அதில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,
வரலாற்றுக் காலம் முதல் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையே நெருக்கமான உறவில் காணப்பட்டுள்ளன. பாஹியன் வருகை முதல் இது முக்கியத்துவம் பெறுகிறது. பாகியன் எழுதிய வரலாற்றுக் குறிப்புக்கள் பலவற்றில் இலங்கை பற்றிய தகவல்கள் காணப் படுவதால் உலகலாவிய ரீதியில் இலங்கை பிரபல்யம் அடைய ஒருகாரணமாகவும் அமைந்தது.
1949 ல் மாவோ சேதுங் அவர்கள் பீஜிங் நகரில் இருந்து மிகவும் வலுவான ஆட்சியை ஏற்படுத்தினார். அது 60 வருடங்களுக்கு முன் இலங்கைப் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்காவிற்கு பெரும் அனுகூலமானது. இதன் காரணமாக இறப்பர் - அரிசி ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது. இது இலங்கைக்கு மிக அனு கூலமானது. ஏனெனில் எமது இறப்பருக்கு சீனாவில் சந்தை வாய்ப்பும் அதே நேரத்தில் எமக்குத் தேவையான அரிசியை தங்கு தடை இன்றி இறக்குமதி செய்து கொள்ளவும் வழி வகுத்தது என்றர்.
இங்கு பிரதமரை இலங்கைக்கான சீன உயர் ஸ்தானிகர் ஜெயெஹ் ஹோ வரவேற்று உரையாற்றினார்.
இவ்வைபவத்தில் பிரதமருக்கு இலங்கைக் கான சீன உயர் ஸ்தானிகர் ஜெயெஹ் ஹோ நினைவுச் சின்னம் ஒன்றையும் கையளித்தார். எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரம சிங்க, அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ஜீ.எல்.பீரிஸ், றவூப்ஹகீம், நிமல் சிரபாலத சில்வா, பிரதி அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கீத்தாஞ்சன மெண்டிஸ் பாராளுமன்ற அங்கத்தவர் ரவிகருணா நாயக்கா உற்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment