இலங்கையர் விண்வெளிக்கு செல்கிறார்..!
TN
இலங்கையர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை ஏற்படுத்தவுள்ளோம் என சுப்ரிம் சட் நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஆர்.எம். மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
இலங்கையின் தனியார் நிறுவனமான சுப்ரிம் சட், சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப் பெரிய செய்மதிகளை தயாரிக்கும் கிரேட் வோல் கோப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து ஒரு இலங்கை விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தமொன்றில் சமீபத்தில் சீனத் தலைநகரமான பெய்ஜிங்கில் கைச்சாத்திடப்பட்டது.
ஏற்கனவே தமது நிறுவனம் சீன நிறுவனத்துடன் இணைந்து ஒரு செய்மதியை கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைத்ததாகவும், அடுத்த நடவடிக்கையாக தாம் இலங்கைக்கு சொந்தமான ஒரு செய்மதியை சீனாவின் கிரேட் வோல் அனுசரணையுடன் தயாரிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு முழுமையாக சொந்தமாக இருக்கும் இந்த செய்மதி தயாரிப்பு பணிகள் இன்னும் இரண்டு ஆண்டில் தயாராகிவிடும் என்றும், இதற்கென தாங்கள் மொத்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்திருப்பதாக அவர் சொன்னார்.
இதையடுத்து விரைவில் விண்வெளி வீரர்களாக பயிற்சி பெற விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரவிருப்பதாகவும் மணிவண்னன் தெரிவித்தார். இவர்களுக்கு சீனாவில் பயிற்சி அளிக்கப்படும். மூன்று, நான்கு வருடங்களில் எமது இளைஞர்களில் ஒருவருக்கு விண்வெளிக்கு விஜயம் செய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பு கிடைக்குமென்றும் அவர் தெரிவித்தார்.
ENNAUM SERTHU KOLLUVEEGALA?
ReplyDelete