Header Ads



கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் முதலமைச்சரும், சில போக்குகளும்..!

அபூ அஸ்ஜத்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தேர்தல் என்று ஒன்று வருகின்ற போது சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் அடிபட்டுக் கொள்வதும் அதனை ஆசுவாசப்படுத்துவதற்கு பல தரப்புக்கள் தமது மூக்கை நுழைத்து இயலாமல் போவதும் இறுதியில் தாம் விரும்புகின்ற முறையில் தேர்தலில் போட்டியிடுவதும் தோல்வியை தழுவியதன் பின்னர் ஏனைய முஸ்லிம் கட்சிகள் மீது காழ்ப்புணர்வு கொள்வதும் தொடர் கதையாகத்தான் இருக்கின்றது. இதற்கு முற்றுப் புள்ளி வைத்தால் தமது அரசியல் அதிகாரம் இல்லாமல் போய்விடும் என்பதும் அரசியல் தலைமைகளின் சிந்தனைகளாகும்.

கிழக்கு மாகாண சேபை தேர்தல் குறித்தும் அதனது திகதி குறத்தும் தேர்தல் ஆணயாளர் அண்மையில் கட்சிப் பிரதி நிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.அந்த சந்திப்பானது மிகவும் முக்கியமானதாகும். கருத்துப் பிளவு கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளை தேர்தல் திகதியினை குறித்து கொள்வதிலாவது ஒற்றுமையின் வெளிப்பாடாக அமையும் என்ற நம்பிக்கையில் தேர்தல் ஆணையாரது இந்த கூட்டம் இடம் பெற்று முடிந்துள்ளது. இக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் மற்றும் அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்த்தனர்.

இந்த கூட்டத்திற்கு ஸ்ரீ.ல.முகாங்கிரஸ்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.அப்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,தேர்தல் காலம் நோன்புக்குள் வருவதால் பல சிரமங்கள் இருப்பதாலும் தேர்தலை அடுத்த மாதம் 15 ஆம் திகதி வைப்பது பொருத்தம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.அப்போது பலரும் இந்த விடயத்தில் நியாயம் கண்டுள்ளனர்.

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான ஹஸனலியும் இருந்துள்ளார்.இது குறித்து அவரது கருத்து வெளிவரவில்லை அப்படியெனில் ஹூனைஸ் எம்பியின் கோறிக்கைக்கு சாதகமாகவே மௌனம் இருந்தது.

இவ்வாறான சூழ் நிலையில் கிழக்கு தேர்தலுக்கான அறிவித்தல்கள் இறுதியாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்படும். அது ஒரு புறமிருக்க இன்று  இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டியது முஸ்லிம் பெயர்களில் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு உள்ள பிரதான கடமையாகும் என்றால் அது மிகையாது,அது ஸ்ரீ.மு.கா,அ.இ.மு.கா,தே.க.,உலமா கட்சி என்று எந்த பெயரில் அவைகள் இருந்தாலும் அதனது இறுதித் தீர்மானம் மிகவும் காத்திரமானதாக இருக்க வேண்டும்.

தமிழ் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேச புலம் பெயர் அமைப்புக்களும்,ஆதரவு நாடுகளும், ஆர்ப்பாட்ங்களையும்,இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களையும் கொடுத்து அவர்களது பிரச்சினைகளின் வடிவத்தை சர்வதேசத்தில் பிரதி பலிக்க செய்த வண்ணம் உள்ளன. ஆனால் துரதிஷ்டம் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் அமைப்புக்கள் நாட்டுக்குள் எதிர்ப்பை தெரிவிப்பதில் கூட நலுவுகின்ற போக்கை தான் கடைபிடித்துவருகின்றது. இந்த நிலை தான் தற்போதைய கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஏற்படப்போகின்றது.

தேர்தல் நடை பெறப் போகின்றது என்று அறிவித்தல் வந்த்தும் அனல் தெரிக்கும் அறிக்கைகளும்,பொறுப்பற்ற செய்திகளும் ஊடகங்களையும் பிழையாக மக்கள் சிந்திக்கும் அளவுக்கு முன்னுக்கு பின்பான ஒரே கட்சியை சார்ந்த அரசியல் பிரதி நிதிகள் விட்டுக் கொண்டிருப்பது சமூகத்திற்கு ஒரு போது பாதுகாப்பானதாக இருக்காது.

தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் முஸ்லிம் கட்சிகள் ஏதே ஒரு வகையில் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதால் ஒரளவு முஸ்லிம் கட்சிகளின் பலத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். இது ஒரு நல்ல சந்தரப்பமாக சில முஸ்லிம் கட்சிகள் புரிந்து கொண்டு மிகவும் கடு கட்சிதமாக தமது அரசியல் பணிகளை முன்னெடுப்பதையும் காணமுடிகின்றது.இதனை ஏற்படுத்துவதில் குறிப்பாக அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் பங்களிப்பு மிகவும் சிலாகித்து பேசக் கூடியதொன்று என்பதை இலங்கை முஸ்லிமக்ள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

முஸ்லிம் சமூகம் என்கின்ற போது அது வெறுமனே முஸ்லிம் அரசியல் தலைமைகள் மட்டுமல்ல என்பது இன்று மாற்றப்பட்டு அதில் பல் துறை சார்ந்தவர்களும் இருக்கின்றார்கள் என்பதை புலப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தற்போது கிழக்கு தேர்தல் குறித்து ஜமிய்யத்துல் உலமா,மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஒன்றியம் உள்ளிட்டவர்கள் முஸ்லிம் கட்சிகளுடன் ஒரே மேசையில் ஒழிவு மறைவின்றி பேச்சுக்களை நடத்த ஆரம்பித்துள்னர்.

இதே வேளை இந்த கட்சிகளின் ஒருமைப்பாட்டை பெற்றுக் கொள்வதில் பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்கள் எடுத்த முயற்சியானது காலத்தன் பதிவாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பிரதி அமைச்சரின் அழைப்புக்கு கட்சிகளுக்கு அப்பால் நின்று அமைச்சர் றிசாத் பதிலளித்தமை இன்னுமொரு வரலாறு  தான், ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பை தீர்மானிப்பது தலைவர் ஹக்கீம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றாலும் அந்த தீர்மானங்கள் மக்கள் தீர்மாணித்த்தன் பின்னர் அறிவிக்கப்படுமெனில் அது செல்லாக்காசாகத்தான் இருக்கும் என்பதை தலைமைக்ள புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. முஸ்லிம் அரசியல் கட்சிகளை பொறுத்த வரையில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது உறுதியானதாக இருக்கும் நிலையில் ஒருமை பாட்டுக்கு வருவது தான் கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு நன்மையாக அமையும். ஆனால் இந்த உடன்பாட்டை எட்டுவதற்கு ஜமாத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் முடியாது போயுள்ளது.

இக்கட்சிகளை ஒரே மேசையில் அமரச் செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லி நகையாடுமளவுக்கு செயலாற்றுவது கவலையினை தருகின்றது. எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையை தீர்ப்பதற்கு பொறுப்புவாய்ந்தவர்கள் முன்னிற்பதை விடுத்து கூட்டத்தை ஏற்படுத்தியவர்களை அவமதிப்பது அநாகரிகமான செயலாகும்,அதிகாரங்கள் எப்போதும் ஒருவரிடத்தில் இருப்பதல்லை,அது அல்லாஹ்வின் புரத்தில் இருந்த வருகின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அந்த கூட்டதிற்கு அழைப்புவிடுக்கப்பட்ட போது அரசியல் கட்சி தலைவர்கள் வருகைத் தந்து நல்ல தீர்மானத்துக்கு உடன்பாடு தெரிவித்தார்கள். சிலர் வருவதிலிருந்து தவிர்ந்து கொண்டார்கள், இதன் வெளிப்பாடு என்ன என்பதை பொறுத்திருந்து பாரக்க வேண்டியுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் இந்த நாட்டு முஸ்லிம்களின் விடயங்களை அல்குர்ஆன்,அல்ஹதீஸ் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வழிகாட்டவேண்டிய பொறுப்பு அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபைக்கு இருக்கின்றது என்பதை நினைவுபடுத்த விரும்புவதுடன்,தொடர் முயற்சிகள் இறைவனின் நாட்டத்தால் வெற்றி பெறும் என்பதற்கமைய உடன்பாடு கண்டவர்களுடன் ஒன்று சேர்ந்து முஸ்லிம் முதலமைச்சரை பெறும் பயணத்தில் உறுதியுடன் செயற்படுவது தான் இன்றைய தேவையாகும்.

No comments

Powered by Blogger.