வெற்றுப் பத்திரத்திலேயே அரசுடன் மு.கா. உடன்படிக்கை - மசூர் மௌலானா சாடுகிறார்
கிழக்குத் தேர்தலில் அரசுடன் இணைந்து களமிறங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவானது முஸ்லிம் மக்களுக்கு இழைத்த வரலாற்றுத் துரோகமாகும். முஸ்லிம்களை இனிமேல் இறைவன் தான் காப்பாற்றவேண்டும்.
இவ்வாறு கிழக்குத் தேர்தல் குறித்தான மு.கா.வின் முடிவைக் காரசாரமாக விமர்சித்து, காட்டமாகக் கருத்து வெளியிடுகின்றார் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா. இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
எந்த நோக்கத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதோ இன்று அந்த நோக்கம் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டுவிட்டது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉச்சபீடக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டே கட்சித் தலைமை குறித்த முடிவுக்குச் சென்றுள்ளது.
சில கருமங்கள் அறிந்தும் புரிந்தும் தெரிந்தும் செய்பவை. ஆனால், மு.காவும் மேற்படி கோட்பாடுகளை மீறி பேச்சளவில் மட்டுமே அதாவது வெற்றுப் பத்திரத்திலேயே அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. இது தமிழ் பேசும் சமூகத்துக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும். இதை என்றும் வரலாற்றில் மாற்றியமைக்க முடியாது.
முஸ்லிம் சமூகம் இன்று தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் ஓர் இனமாக இருந்துவருகின்றது. இந்தநிலையில், முஸ்லிம் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியான மு.கா. எடுத்துள்ள மேற்படி முடிவானது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என எண்ணத் தோன்றுகின்றது.
தமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் இதுவரைகாலமும் "ஒற்றுமை' என்ற நடை முறைப்படுத்தப்படாத அற்புதமான உடன்படிக்கையொன்று இருந்துவந்தது. ஆனால், உணர்வுபூர்வமான விடயத்துடன் சம்பந்தப்பட்ட அந்தக் கண்ணுக்குப் புலனாகாத உடன்படிக்கை இன்று காற்றில் பறந்துசெல்லும் கட்டத்தை எட்டியுள்ளது. மு.காவின் முடிவே இந்தப் புயலை உருவாக்கியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எந்த நோக்கங்களுக்காக மறைந்த தலைவர் அஷ்ரப் அன்று நிறுவினாரோ இன்று அந்த நோக்கங்கள் எண்ணங்கள்அபிலாஷைகள் ஆகியவை திசைமாறிச் செல்கின்றன. இது எமது எதிர்கால சந்ததிக்கு உகந்ததல்ல.
அதேவேளை, இரண்டு கட்சிகளுக்கிடையில் பேச்சு நடந்தால் அந்த இரண்டு கட்சிகளினதும் செயலாளர்கள் அதில் பங்குபற்றவேண்டும். அதுவே அரசியல் கோட்பாடாக இதுவரைகாலமும் இருந்துவந்தது. ஆனால், அரசு டன் மு.கா.நடத்திய பேச்சுகளின்போது எமது கட்சிச் செயலாளரின் பிரசன்னம் இடம் பெற்றிருக்கவில்லை. அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் கட்சியின் அதி உச்சபீடக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், பொருத்தமான பதிலெதுவும் கிடைக்கவில்லை.
முஸ்லிம் மக்களின் நலன்களை உரிமைகளை கட்டிக்காக்க வேண்டிய கடப்பாட்டைக்கொண்ட கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள மு.கா. தனது சமூகம் இன்னல்படும்போது காலத்துக்கு முரணானதொரு முடிவை எடுத்துள்ளமையானது மன்னிக்கமுடியாத தவறாகும். அதை என்றும் மாற்றியமைக்க முடியாது என்றே நான் கருதுகின்றேன்.
அதிஉச்சபீட உறுப்பினர்களில் பலர் பலவிதமான கருத்துகளை முன்வைத்திருந்தாலும் அவை உரிய முறையில் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, கிழக்குத் தேர்தலில் அரசுடன் இணைந்து களமிறங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவானது தமிழ் பேசும் மக்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும் செயலாகும். இதன் பின்விளைவுகளை இனிவரும் காலங்களில் உணரக் கூடியதாக விருக்கும்.
அரசியலுக்காக சமூகத்தின் முதுகில் சவாரி செய்ய நினைப்பது சமூகத்துக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். முஸ்லிம் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற விடயத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவே இருந்துவருகின்றது. அவர்களை சர்வதேசமும் அங்கீகரித்துள்ளது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் முன்னெடுக்கும் எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அதில் எனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்றார்

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்,
ReplyDeleteஇந்த மனிசனுக்கு தமிழர் விடுதலை கூட்டணியுடன் சேரவில்லையே என்கிற ஆதங்கம்.என்ன கொடுமை இது.முதலில் இவருக்கு நாம் முஸ்லீம்கள்,தனித்துவமானவர்கள் என்று யாராவது சொல்லிகொடுங்கள் ,தமிழ் சிங்களம்,ஆங்கிலம் எல்லாம் நாம் பேசக்கூடிய மொழிகள் என்பதையும் சொல்லிகொடுங்கள்-.