பேரம் பேசுகின்ற சக்தியை இழந்து தவிக்கின்றோம்..! - ரவூப் ஹக்கீமுக்கு ஒரு கடிதம்
Hon. Rauf Hakeem,MP Leader Srilanka,Muslim congrars
Colombo-03
மர்சூக் அகமட் லெப்பை
அல் அமீன வீதி ;
அல் அமீன வீதி ;
காத்தான்குடி - 06
அஸ்ஸலாமு அலைக்கும்.
2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தல்
என்னுடைய தந்தை அஷ்ஷகீத் அகமட் லெப்பையின் தலைமையில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. எனத தந்தைதான் இக் கட்சிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என பெயரிட்டவர். அவர் இக் கட்சியை ஆரம்பிக்கும் போது இது வட கிழக்கு மாகாணத்திற்கான ஒரு பிராந்திய கட்சியாகத்தான் இருக்கவேண்டும் என விரும்பினார். ஆனால் எனது தந்தையோடு இவ்விடயத்தில் முரண்பட்ட மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் இதனை தேசிய கட்சியாக பிரகடனப்படுத்தினார். ஆனால் வட கிழக்குக்கு வெளியே என் தந்தை குறிப்பிட்டது போல இன்னும் வளராமலே இருக்கின்றது.
தமிழர் கூட்டமைப்பு கூட இன்னும் தங்கள் கட்சியை வட கிழக்கிலே மாத்திரம் ஒரு பிராந்திய கட்சியாகவே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். தமிழர் கூட்டமைப்பினர் இதுவரை எதற்கும் விலை போகாத காரணத்தினால் இன்னும் அம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளனர். அசைக்க முடியாத சக்தியாக உள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் இப்போது எம்முன்னே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர் கொண்டுள்ளது. இந்த மாகாண சபையின் ஆட்சியை பிடிப்பதில் முஸ்லிம் காங்கிரஸ்ஸின் பங்கானது மிகவும் இன்றியமையாதது. முஸ்லிம் காங்கிரஸ் யாரோடு கூட்டமைக்கின்றதோ அவர்களால்தான் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியும்.
எனவே கிழக்கு மாகாண சபையிலே முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு உள்ள பேரம் பேசுகின்ற சக்தியை இந்த தேர்தலிலே நாங்கள் அதிகபட்சம் பாவிக்கவேண்டும். அதாவது முஸ்லிம்களின் நலனுக்காக அதிகபட்சம பாவிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ்சின் நலனுக்காக அல்ல.
1994ம் ஆண்டு, 2000மாம் ஆண்டு, 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பராளுமன்றங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரஸ்ஸிலேயே தங்கியிருந்தது. முஸ்லம் காங்கிரஸ் இல்லாவிட்டால் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. 2001 ஆண்டு பாராளுமன்றத்தில் நாங்கள் சந்திரிக்கா அரசை விட்டு பிரிந்து சென்றதனால் அரசாங்கம் கலைந்தது. நாங்கள் 2002ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்கினோம். நாங்கள் இணைந்ததால்தான் அரசாங்கம் அமைக்க முடியும் நாங்கள் பிரிந்தால் அரசாங்கம் கலையும் என்ற நிலையை உருவாக்கி இருந்தோம். இவ்வாறு முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த பேரம் பேசுகின்ற சக்தியை மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் அதிகபட்சம் முஸ்லிம் சமூகத்திற்கு பயன்படுத்தினார்கள். இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு முகவரியை தேடிக்கொடுத்தார்கள்.
இப்போது இந்த பேரம் பேசுகின்ற சக்தியை மத்திய அரசிலே இழந்து தவிக்கின்றோம். இந்த பேரம் பேசுகின்ற சக்தியை மத்திய அரசிலே இழப்பதற்கு நாங்கள்தான் காரணம். எங்களுடைய அரசியல் சாணக்கியமின்மையே காரணம். முஸ்லிம் சமூகத்தை முன்னேற்ற அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட இக்கட்சியை, நாங்கள் எங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்காகவும், எங்களுடைய சொந்த பொருளாதார முன்னேற்றத்திற்காகவும்தான் அஷ்ரப் இக்கட்சியை எங்களிடத்தில் விட்டுச் சென்றுள்ளார் என்ற தவறான புரிதலினால்தான் எங்களுக்கு மத்திய அரசாங்கத்திலிருந்த பேரம் பேசுகின்ற சக்தியை இழந்தோம்.
இந்த தவறை எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் செய்ய முடியாது. கிழக்கு மாகாண சபையில் எங்களுக்கு உள்ள மாபெரும் ஆயுதமான பேரம் பேசுகின்ற சக்தியை மிகச் சாதுரியமாக கையாள வேண்டும்.
அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்க வேண்டும் என்ற நிலைபாட்டை நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எடுக்க கூடாது. அரசாங்கமானது முஸ்லிம்களுடைய தனியார் காணியை மாத்திரமல்ல காத்தான்குடியிலே பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியையும், காத்தன்குடியிலே உள்ள ஜனாஸாக்களை அடக்குகின்ற மையவாடிக்காணிகளையும் அபகரிக்கின்றது. அரசாங்கத்தோடு சேர்ந்தால்தான் எம்மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற மூடத்தனத்திலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
அரசாங்கத்தோடு சேர்ந்து செய்வதைவிட அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம் செய்ததுதான் அதிகம். நீங்கள் உங்களது கடந்த கால அனுபவங்கள் மூலம் இதனை உணர்ந்து இருப்பீர்கள் எதிர்க்க,எதிக்கதான் அரசாங்கம் எம்மீது வைத்திருக்கும் மரியாதையை அதிகரிக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களை சமாளிக்க ஒரு ப்ராடோ(Pசயனழ)வாகனம் போதும் என எங்களை அரசாங்கம் ருனெநச நுளவiஅயவந(குறைத்து மதிப்பிடுதல்) செய்வார்கள்.
காலமெல்லாம் தமிழர் கூட்டமைப்பினர் அரசாங்கத்தினை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர் பகுதியில் அபிவிருத்திகள் நடக்கத்தான் செய்கின்றன. வேலை வாய்ப்புக்களை தமிழர்கள் பெறத்தான் செய்கின்றார்கள். தமிழர் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இன்றும் செல்வாக்குடன்தான் இருக்கின்றனர்.
நான்கூட காத்தான்குடியிலே அபிவிருத்தி செய்வதென்றால் சகோதரர் ஹிஸ்புல்லாவுடன் இணைந்தால்தான் செய்யலாம் என தப்புக்கணக்கு போட்டேன். இறுதியிலே சகோதரர் ஹிஸ்புல்லாவை எதிர்த்தபோது நான் செய்ய வேலைகளைக்கூட அவரோடு சேர்ந்தபின் செய்ய இயலாமல் போனது.
எனவே இத்தேர்தலிலே தமிழர் கூட்டமைப்போடு சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். அது சாத்திய படாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டு பின்னர் தமிழர் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும். கிழக்கிலே சிறுபான்மையினரின் கூட்டாட்சி உருவாக வேண்டும். அதன் மூலம் நாங்கள் இந்த அரசாங்கத்தையும் ஏன் உலகத்தையும்கூட அடிபனிய வைக்கவேண்டும். யார் என்ன சொன்னாலும் கிழக்கிலே தமிழர்களோடுதான் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். ஏன் என்றால் இங்கு நாங்கள் பிட்டும் தேங்காயும் போல் புவியியல் ரீதியாக பின்னிப்பிணைந்து வாழ்கின்றோம். எங்களுக்கு முஸ்லிம் முதலமைச்சர் முக்கியமல்ல. முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாகின்ற தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்தால் போதுமானது. எங்களின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட தமிழ் முதலமைச்சர் நிச்சயம் நன்றியோடு முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பார். அவ்வாறு அவர் எங்களது உரிமைகளை பாதுகாக்காவிட்டால் நாங்கள் ஆட்சியை மாற்றலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்பது என்பது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும்.
எனவே, எனது ஆகார்ஷியத் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களே!
புது முடிவு எடுத்து புதுயுகம் படைப்போம். எதற்கும் விலைபோகாமல் எமது சமூக நலனில் மாத்திரம் அக்கறை எடுத்து எமது சிறுபாண்மை சமூகத்தின் ஒற்றுமையை நாட்டிற்கும் உலகத்திற்கும் பறைசாற்றுவோம். அல்லாஹ் நாம் செய்கின்ற நன்மையான காரியங்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்..
இவ்வண்ணம்
மர்சூக் அகமட் லெப்பை.
.
ஹக்கீம் கிழக்குமாகான மக்களை எமாற்றி விட்டார் பதவிக்கும் பணத்துக்கும் சொகுசு வாகனகளுகும் ஆஷை படுபவர்தான் இந்த ஹக்கீம் பஷீர் முஸ்லிம் மக்களுக்கு செய்யும் பச்சா துரோகம் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண மக்களை பத்தி கவலை இல்லை அவருக்கு அவர் பதவிதான் முக்கியம் கிழக்கு மாகாண மக்களை அல்லாஹ்தான் பாதுகாக்க வேணும் .!தலைவர் இருந்தால் இந்த ஹக்கீம் இப்படி எல்லாம் பண்ணுவார இவருக்கு சொகுசு வாகனம் அவருடய வியாபாரம் அவருடய அமைச்சர் பதவி முஸ்லிம்காங்கிரஸ் கிழக்குமாகான மக்களை பத்தி என்ன கவலை தலைவர் மக்களுகா போராடினர் இவர் பதவிய காப்பாத்தி கொள்ள முஸ்லிம் மக்களிடம் தலைவர் என்ற போர்வைள் நடிக்குற ..!
ReplyDeleteஎன்ன செய்வது காத்தான்குடியில் ஒரு ஹிச்பல்லா மன்னார்ல ஒரு ரிசாத் மர்ஹூம் அஸ்ரப்ட மன்சிவேற, இன்னும் பெயர் நினைவுக்கு வராத பலர், எப்போ
ReplyDeleteஇந்த ஹகீம் கையிற்றை லூஸ் விடுறாரோ உடனே பக்குன்னு அவனுகள் பக்கம் இழுத்துக்கிறான்கள். ஆக கடைசியில நம்மள வீட்டோட உக்கார
வாச்சிருவான்கள் என்று அவரும் கையிற்றை டம் கட்டி இழுக்கிறாரு, அரசாங்கமும் தேவைக்கு ஏற்ப ரெண்டு பக்கமும் டைட் பன்ணி தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறது. சரியோ பிழையோ ஒரு தலைமைக்கு கட்டுப்பட எல்லோரும் முன்வர வேண்டும். இல்லையேல் மறுமையில்
அல்லாஹ்விடம் பதில் சொல்லவேண்டி வரும் என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை விட்டு போய்விட்டது. நம் அனைவரையும் அரசாங்கத்தின் காலடியில் அற்ப சுகங்களுக்காக போட்டு விட்டது.
ReplyDeleteஎமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கும் காலம் உருவாகிவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் மற்றும் இதர அரச அடிவருடி முஸ்லிம் கட்சிகளின் ஆதரவாளர்களே,
உங்கள் ஊருக்கு பாதை அமைக்கவேண்டும், புதிய பாடசாலை கட்டடம் அமைக்க வேண்டும், சந்தை அமைக்கவேண்டும் என்றால் அவர்களை தெரிவு செய்யுங்கள்.
(தமிழ் மக்களின் பேராதரவை பெற்ற கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்ததே இல்லை ஆயினும் தமிழ் மக்களுக்கு பாதை, பாடசாலை, சந்தை என்பன கிடைத்தனவே.)
இல்லை, நாங்கள் உயிரினும் மேலாக நினைக்கும் இறையில்லங்களை பாதுகாக்க போராட வேண்டுமா? அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் எம்மவர்களின் நிலங்களை மீளப்பெற போராட வேண்டுமா? கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் எதிர்கால வாழ்வை செம்மையாக்கி எமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக போராட வேண்டுமா?
முடிவு எடுங்கள்.
நீதி அமைச்சராக இருந்த உங்கள் தலைவரால் எங்கள் இறையில்லங்களுக்கு என்ன செய்ய முடிந்தது?
யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன அகதியான எம்மக்கள் அனைவரும் சொந்த இடங்களுக்கு திரும்பி விட்டனரா?
அபகரிக்கப்படும் எங்கள் நிலங்கள்?
சிங்கள பௌத்த பேரினவாதம் கக்கும் அரசு இவற்றை தீர்க்க முன்வரவே இல்லை.
நீதி அமைச்சர் கேட்கிறார், முதலமைச்சர் பதவி, மாகாண சபை உறுப்பினர் பதவி ..................
பதவி..... பதவி.....பதவி..... கேவலம்...........
அரசின் எலும்புத்துண்டுகளுக்கு காத்து கொண்டு இருப்பவர்களை தூக்கி எறிந்து விட்டு,
இன்ஷா அல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இதர அரசின் அடிவருடி முஸ்லிம் கட்சிகளின் அதிருப்தியாளர்கள் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் நாம் தனித்து கௌரவமாக அல்லாஹ்வின் வழியில் போட்டியிடுவோம்.
யா! அல்லாஹ் எம் மக்களை பாதுகாப்பாயாக. ..............
யா! அல்லாஹ் எம் அரசியல் வாதிகளை உன் வழியில் அழைப்பாயாக.....
ஆமீன்.
யாழ் முஸ்லிம் இணைய நிர்வாகிகளே, இந்த அரசியல் வாதிகளின் ஆட்டங்களால் எம்மக்கள் அரசியலில் வழி தவறி போக கூடாது. எம்மீதான தாக்குதல்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் எதிராக போராட வேண்டும். நாங்கள் ஒன்றிணைய வேண்டும். ஊடகத்தினாலேயே மக்களை அதிகம் நெருங்க முடியும். எம்மக்களை தெளிவு படுத்துங்கள். உதவுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
ஹக்கீமிடம் காட்டும் ஆக்ரோசத்தை ஏன் ரிசாத்,அதா உள்ளா ,ஹிஸ்புல்லாவிடம் காட்டுவதில்லை இவர்கள் உடைத்தால் மண் குடம் ஹக்கீம் மட்டும் உடைத்தால் பொன் குடமா? எதுவாக இருந்தாலும் ஜதார்த்தத்தை பேச வேண்டும்.
ReplyDeleteசில வேலை ஹக்கீம் அரசுக்கு ஆதரவளிக்காமல் அரசிலிருந்து பிரிந்து வந்தால் என்னவாகும் கட்சியில் உள்ள சில பேர் ரிசாத்,அதா உள்ளா ,ஹிஸ்புல்லா போன்றோர் மாதரி அரசோடு ஒட்டி கொண்டு ஹக்கீமை மட்டும் வெளியே தள்ளுவார்கள்.
இல்லை ஹக்கீம் செய்ததுதான் சரி என்று நமது சமூகம்தான் விசுவாசமாக இருப்பார்களா என்ன? அப்படி கடந்த காலங்களில் இருந்திருபார்கலேயானால் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒருகாலும் அமைச்சு பதிவிகளை பெற்றுகொண்டு சுக போகமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.
மக்கள் ஒரே நிலையில் இல்லாத வரையிலும் நம் சமூகத்தை அந்த அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.