Header Ads



முஸ்லிம் பிரதிநிதிகளால் கிழக்கு முஸ்லிம்ளுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கவில்லை

gtn

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 30 வீத பலமே இருப்பதாகவும் 70 வீதமான பலம் எதிர்க்கட்சிக்கே இருப்பதாகவும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

தமிழரான முதலமைச்சர் ஒருவர் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்டிருந்த போதும், அவர் தமிழ் மக்களுக்கு செய்த எந்த நன்மையுமில்லை எனவும் எதிர்க்கட்;சியில் போட்டியிட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளால் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும் எவ்விதமான நன்மையும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

யானை சின்னத்தில் போட்டியிட்டு, கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட பின்னர், அவர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் 30 ஆயிரம் ரூபா பணம் இன்னும் அவர்களின் பைகளிலேயே உள்ளதுடன், அதனை பயன்படுத்தி அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு நிவாரணங்கள் எதனையும் வழங்குவதில்லை. தமது பிரதிநிதிகளால் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர், முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே.

கிழக்கு மாகாண மக்கள், தமிழ் தலைவர்களையும் முஸ்லிம் தலைவர்களை உரசி பார்த்து அறிந்துள்ளனர். தற்போது மீதம் இருப்பது தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட சகல மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சிங்கள தலைவர்கள் மாத்திரமே.  ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி எனவும் தயா கமகே கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.