யாழ்ப்பாணத்தில் புனித ரமழான் ஏற்பாடுகள்
யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தை சிறப்பாக கடைபிடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை புனித ரமழான் தலைப்பிறை தென்பட்டதையடுத்து, யாழ்ப்பாண பள்ளிவாசல்களில் பரவலாக தறாவிஹ் தொழுகை நடைபெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை முதல் நோன்பு (இப்தார்) நிகழ்களும் நடைபெற்றுள்ளதுடன், தறாவிஹ் தொழுகை நடைபெறும் நேரத்தில் தேனீர் மற்றும் பலகாரங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் திருத்தப்படாமல் கைவிடப்பட்டிருந்த சின்னப்பள்ளிவாசல் அண்மையில் கட்டப்பட்டு மீளத் திறக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. முன்பு எஞ்சியிருந்த கட்டிடத்தில் தொழுவதற்கு யாரும் வருவதில்லை. தற்போது மீளக்கட்டப்பட்ட பள்ளியில் சுபுஹு தொழுகைக்கு 15-20 பேர்களும் இஷாவுக்கு 25 பேரளவிலும் சமூகமளிக்கின்றனர். மேலும் ரமலான் மாத தராவீஹ் தொழுகைகளில் 20 ஆண்களும் 30 பெண்களும் பங்கு பற்றுகின்றனர்.
1990இக்கு முன்பு இருந்தது போல் தற்போது மீண்டும் தராவீஹ் தொழுகையின் பின்னர் தொழுதவர்களுக்கு தேணீர் வழங்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் ரமலான் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் மீளக்குடியேற ஆசைப்படும் அளவுக்கு ரமலான் சிறப்பாக யாழ்ப்பாண பள்ளிவாசல்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. சின்னப்பள்ளிவாசலின் வேலைத் திட்டங்கள் ஒரு மீள்குடியேற்றத் திட்டமாகவே மேற்கொள்ளப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
Masahallah...Masahallah...Allah Akbar..Allah Akbar!My heartfull ramadan karem wishes my Brothers and Sisters in Sri lanka!
ReplyDeleteதராவிஹ் என அறியப் படும் (கியாமுல் லைல்) இரவுத் தொழுகையாக இருந்தாலும், நோன்பாக இருந்தாலும்
ReplyDeleteநபி செய்து காட்டிய முறையில் கூட்டல் குறைத்தல் இல்லாமல் செய்யப் பட வேண்டும்.
அமல்களில் நூதனங்களும் புதுமைகளும் புகுந்து விட்டால், அவை அல்லாஹ்வால் வெறுக்கப்படும்
வழிகேடுகளாக மாறிவிடும். இதனையே நபியவர்கள் ஒவ்வொரு குத்பாவிலும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.