Header Ads



இந்த உலகத்தில் எல்லாவற்றையும் நாங்கள் இழக்கத் தயாராய் இருக்கிறோம்

வைத்தியசாலையில் வழமையான அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவசரமாக அழைப்பு வர அங்கு விரைந்தேன். பதினெட்டு மாதக் குழுந்தை ஒன்று சுயநினைவிழந்து கை, கால்களுடன் உடம்பு விறைத்து நடுங்கிக் கொண்டிருந்தது. வாயில் நுரை தள்ளியிருந்தது. வலிப்பு ஏற்பட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட அக்குழந்தை கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தது.  தாதிமாரும் அவசர சிகிச்சைக்குப் பொறுப்பான வைத்தியரும் வலிப்பை  நிறுத்துவதற்கான மருந்துகள் கொடுத்தும் கூட தொடர்ந்தும் அந்தக் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒரு மணி நேரம் வரை நீடித்த அந்த வலிப்பை முழு உடலையும் தளர வைக்கும் ஒரு வகை  மருந்தை இரத்தத்திற்கு நேரடியாக ஊசி மூலம் ஏற்றியதன் பின்பே கட்டுப்படுத்த முடிந்தது.

பாவம் அக்குழந்தையின் பெற்றோர். கண்ணீர் மல்க செய்வதறியாது தவித்துப் போய் நின்று கொண்டிருந்தனர். இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும் அதிகமாக அழுததாகவும் பாலைக் கூடக் குடிக்காமல் மறுத்து சோர்ந்து போயிருந்ததாகவும் சொன்ன அந்தப் பெற்றோர் அந்தக் குழுந்தையை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு (OPD) கொண்டுவரும்போது  ஏற்பட்டதுதான் இந்த வலிப்பு.

 சாதாரணமாக விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு ஏன் இவ்வாறு திடீரென ஒரு நோய்? ஏன் இப்படி வலிப்பு ஏற்படுகிறது? இந்த  நீண்ட நேர  வலிப்பு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்குமா? இப்படியெல்லாம்  பல கேள்விகள் கேட்டுக் கொண்டே சென்றார் அந்தக் குழந்தையின்  தந்தை.

 நீண்ட நேர வலிப்பு குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். சாதாரணமாய் வளர்ந்து வந்த குழந்தைக்கு இப்படியான நீண்ட நேர வலிப்பின் பின் கை, கால்கள் சரியாக இயங்காமல் மூளையும் உடலும் பாதிக்கப்பட்டு ஒரு அங்கவீனக் குழுந்தையாக மாறவும் முடியும்.

 இவ்வாறான விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டிவரும் என்று  தெரிய வந்ததும் அந்தத் தாயும் தந்தையும் “ இந்த உலகத்தில் எல்லாவற்றையும் நாங்கள் இழக்கத் தயாராய் இருக்கிறோம், குழந்தையை மீண்டும் சாதாரண நிலைக்குக் கொண்டு வர முடியமா? என்று கேட்டபோது "எதிர் காலத்தை அறிந்தவன் இறைவன் மட்டுமே' என்று சொல்வதைத் தவிர வேறு பதில் எங்களிடம் இருக்கவில்லை.

இந்த வலிப்பு "மூளைக் காய்ச்சலின்' விளைவாக ஏற்பட்டது. இந்த மூளைக் காய்ச்சல்  ஏன் ஏற்படுகின்றது என்பதையும் தடுப்பூசியினால் அதனைத் தடுத்திருக்க முடியும் என்பதையும்  அறிய வந்த தந்தைக்கு இந்த நோயைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தான் மேற்கொள்ளவில்லையே என்ற குற்ற உணர்வு உறுத்திக் கொண்டிருக்கிறது.

 இந்த ஆபத்தான மூளைக் காய்ச்சல் ஏற்படக் காரணம் Haemophyllus in fluenza type - B என்ற பக்ரீரியாவால் ஏற்படும்  மூளைக்காய்ச்சல் மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மேற்கத்தைய நாடுகளில் இத்தகைய மூளைக் காய்ச்சல் நோய் முற்றாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இந்த பக்ரீரியாவுக்கு எதிராகத் தடுப்பூசி (Vaccine) அங்கு பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. எமது நாட்டிலும் கூட அரசாங்க வைத்திய சாலைகளிலும் சுகாதார வைதிய அதிகாரிகளின்  கிளினிக், கிலும் பலவகையான தடுப்பூசிகள் குழந்தைக்கு கொடுக்கப்படுகின்றன. இருந்த போதும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி (Hib Vaccine) அரசாங்கத்தினால் கொடுக்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்த தடுப்பூசியின்  விலை மிக அதிகமாக இருப்பதாகும்.

ஆனாலும், தனியார் வைத்தியசாலைகளிலும் பாமஸிகளிலும் இந்த தடுப்பூசி விற்பனைக்கு உண்டு. ஒரு ஊசியின் பெறுமதி 1200 ரூபா. ஒரு குழந்தைக்கு 4 ஊசிகள் ஏற்ற வேண்டியிருக்கிறது. Tripple Vaccine என்று சொல்லப்படும் (DPI) முக்கூட்டு  வக்சினுடன் சேர்த்து இதனையும் கொடுக்க முடியும். குழந்தையின் வயது 2 மாதம், 4 மாதம், 6 மாதம் மற்றும் 18 மாதமாகும் போது  இந்த Hib Vaccine ஏற்ற வேண்டும். ஒரு வயது பிராந்திய குழந்தைக்கு ஓர் ஊசி மட்டும்  ஏற்றியிருந்தாலும் போதுமானது. நான்கு  வயதுக்குப் பின் குழந்தைக்கு இந்தத் தடுப்பூசி அவசியமில்லை.

எனவே நான்கு வயதிற்கு குறைவான சிறுவர்கள் உள்ள எல்லாப் பெற்றோரும் அரசாங்க வைத்தியசாலையில் இலவசமாகக் கிடைக்கும் தடுப்பூசியைக் கட்டாயம் பெற்றுக் கொடுக்கும் அதேவேளை Hib Vaccine என்ற தடுப்பூசியையும் கொடுப்பதன் மூலம் ஆபத்தான மூளைக்காய்ச்சல், நியூமோனியா போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற

No comments

Powered by Blogger.