Header Ads



முஸ்லிம் பெண்களின் ஆடைகள் குற்றச்செயல்களை தடுக்கின்றன - பொலிஸ் பெண் பொறுப்பதிகாரி

இஸ்லாமிய சட்டதிட்டங்களும் அது போதிக்கும் ஒழுக்க விழுமியங்களுமே முஸ்லிம்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கின்றதென வர்க்காபொல பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி குமாரி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குவைத்  இலங்கை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போதை பொருளும் இன்றைய இளைஞர்களும் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தர்ங்கில் கலந்து கொண்டு போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருமதி குமாரி ஜயசூரிய தொடர்ந்து உரயாற்றுகையில்,

இஸ்லாம் கூறும் போதனைகளை நான் மதிக்கின்றேன். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளினால் பல்வேறு குற்றச் செயல்கள் தடுக்கப்படுகின்றன. சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் இந்த ஆடை மூலம் தடுக்கப்படுகின்றன.

பாடசாலை செல்லும் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடைகள் மூலமும் குற்றச் செயல்கள் தடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில் அஷ்ஷேக் அக்uம் ஜுனைத், டொக்டர் ஹுஸ்னி ஜாபீர், அஷ்ஷேக் எம்.எம்.ஏ. இம்தியாஸ் மதனி, ஆகியோரும் விரிவுiuகளை நிகழ்த்தினர். கல்லுரி அதிபர் எம்.ஜே.எம்.காஸிம் தொழில் அதிபர் பளீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர். - நவமணி

No comments

Powered by Blogger.