Header Ads



கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் விடுதலை முன்னணியும் போட்டி


எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம் விடுதலை முன்னணி தனித்துவமாக போட்டியிடப்போவதாக அதன் செயலாளர் முபாறக் மௌலவி அறிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தில் பதிவு பெற்றுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி தனது வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் தேர்தல் களம் இறங்குவது பற்றி தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் பெரும் பாலும் நல்ல சமிக்ஞை கிடைக்கும் என நம்புவதாகவும், கிழக்கு தேர்தலில் போட்டியிட தகுதியும், செல்வாக்குமுள்ள வேட்பாளர்கள் 0775449017எனும் இலக்கத்துக்கு தங்களை பற்றிய விபரங்களை உடனடியாக எஸ் எம் எஸ் அனுப்பும்படியும் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.