Header Ads



பெற்றோர்களின் ஜிஹாதும், வைதிஸ் கொலவெறியும்..!



 
முஸ்லிம்களின் தவறு

ஊடகங்களை முஸ்லிம் சமூகம் சரியாக பயன்படுத்தத் தவறியிருப்பதாக தமிழ்நாட்டு முஸ்லிம் லீக்கின் முக்கியஸ்தரும், கல்விமானுமாகிய பாத்திமா முஸப்பர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்றுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாட்டிலேயே கலந்துகொள்ள இலங்கை வந்திருந்த அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆற்றிய உரைகளை சுருக்கமாக தருகிறோம்

முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவலநிலைக்கு காரணம் கல்வியில் முன்னேற்றமின்மையும், அரசியலில் ஐக்கியமின்மையும் ஆகும்.

கண்ணீர்விட்ட மாணவிகள்

இலங்கைக்கு வருகைதந்த பாத்திமா முஸப்பர், மாவனல்ல ஆயிஷா சித்தீக்கா அரபுல் கல்லூரிக்கும் சென்றார். அங்கு உரையாற்றிய அவர்,

''இங்கிருந்து படித்துவிட்டுச் செல்லும் நீஞ்கள் செய்யும் பணி என்ன, திருமணம் முடித்து வீட்டுக்குள் அடங்கி விடுவதா? அல்லது மாற்றத்தை வேண்டி நிற்கும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பணி செய்வதா..? என இறை தூதர்களின் காலத்தில் ஸஹாபிய பொண்மணிகள் செய்த தியாகங்களை நினைவுபடுத்தி பேசியபோது பலர் கண்ணீர் விட்டனர். அவரது இந்த உரையை கேட்டுஅங்கு கல்வி பயிலும் மாணவிகள் கண்ணீர் மல்கினர்.

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு சபாஷ்

அதேவேளை முஸ்லிம் மீடியா போரத்தின் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள பாத்திமா முஸப்பர், இந்தியாவிலும் முஸ்லிம் மீடியா போரம் போன்று ஒரு அமைப்பை ஏற்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சியைக் கண்டு தான் மகிழ்வடைவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றேர்களின் ஜிஹாத்

அத்துடன் ஹெலிஓய அல்மனார் தேசியப் பாடசாலையில் நடைபெற்றுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள பாத்திமா முஸப்பர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை மிகப்பெரும் ஜிஹாத் போராட்டமானது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக வளர்ப்பதாகும்.

இன்று முஸ்லிம் பிள்ளைகள் ''வைதிஸ் கொலவெறி'' என்று பாடிக்கொண்டிருக்கும் காலகட்டம். அதை குழந்தையின் தந்தையும், தாயும் சேர்ந்து அதன் பிழைகளை திருத்தி கொலை வெறியை எனது பிள்ளை எவ்வளவு அழகாக பாடுகுpன்றது என்று பெருமைப்படும் காலகட்டம். பிள்ளைகள் பிஞ்சு போன்றவர்கள். இது அவர்களின் தவறில்லை. பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் தவறு விடுகின்றனர். பிள்ளைகளின் முக்கியத்துவத்தை பெற்றோர் நன்கு புரிந்துகொள்வது அவசியமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு நவமணி

No comments

Powered by Blogger.