பாராட்டுவதா..? பரிதாபப்படுவதா..?? - கிழக்கு தேர்தலில் குதித்துள்ள முஸ்லிம் சகோதரி..!
KWC
எம்.எஸ்.எம். நூர்தீன்
எமது குடும்ப சாப்பாட்டை ஒரு சோறும் ஒரு கறியும் ஒரு சுண்டலுடன் மட்டுப்படுத்தி தியாகத்துடன் வாழ்ந்து சமூக சேவை செய்யும் நான் எனது கணவர் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தை மிச்சம் பிடித்து அதையும் சமூக சேவைக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன் படுத்துவேன் என கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாழைச்சேனையைச் சேர்ந்த புகாரி சித்தி சபீக்கா KWC க்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.
கேள்வி: நீங்கள் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன?
பதில்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெண்களுக்குதவவும் பெண்களின் நலனை கருத்திற் கொண்டுமே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
கேள்வி: சமூக சேவகியான நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு பிரதான காரணம் என்ன?
பதில்: அரசியலில் ஈடுபடுவதன் மூலம் பெண்களின் அரசியல் சார்ந்த விடயங்களை கவனிக்கமுடியும் அதற்காகவே அரசியலில் களமிறங்கியுள்ளேன்.
கேள்வி: நீங்கள் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன?
பதில்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெண்களுக்குதவவும் பெண்களின் நலனை கருத்திற் கொண்டுமே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
கேள்வி: சமூக சேவகியான நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு பிரதான காரணம் என்ன?
பதில்: அரசியலில் ஈடுபடுவதன் மூலம் பெண்களின் அரசியல் சார்ந்த விடயங்களை கவனிக்கமுடியும் அதற்காகவே அரசியலில் களமிறங்கியுள்ளேன்.
கேள்வி: நீங்கள் ஐக்கிய தேசியக்கட்சியை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?
பதில்: ஐக்கிய தேசியக் கட்சி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் பெண்களின் உரிமை சார்ந்த விடயங்களிலும் பெண்களின் நலன் சார்ந்த விடயங்களிலும் அக்கறையுடன் செயலாற்றுகின்றது. மற்ற கட்சிகளை விட ஐக்கிய தேசியக்கட்சி எனக்கு பிடித்தமான ஒரு கட்சியாகும்.அத்தோடு இது ஒரு நேர்மையான கட்சியாகும்.
கேள்வி: நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு உங்கள் கணவர் ஆதரவு தெரிவிக்கின்றாரா?
பதில்: நான் அரசியலில் குதிப்பதற்கும் கிழக்கு மாகாண சபை தேர்;தலில் போட்டியிடுவதற்கும் முதலாவது ஆதரவு தெரிவித்தவர் எனது கணவரேயாகும்.
அத்தோடு எனது பிள்ளைகளான பாத்திமா அஸ்னா, பாத்திமா நாஸிபா, அகமட் ஆதில் ஆகிய மூன்று பிள்ளைகளும் ஆதர தெரிவித்ததுடன் இவர்களின் ஒத்துழைப்பு எனது அரசியல் நடவடிக்கை அதிகம் உள்ளது.
கேள்வி: உங்கள் கணவர் என்ன தொழில் செய்கின்றார்?
பதில்: எனது கணவர் மேஸன் தொழில் செய்பவர்
கேள்வி: உங்கள் கணவரின் பெயர் என்ன?
பதில்: முகம்மது ஈஸா,
கேள்வி: உங்கள் கனவரின் உழைப்பு உங்கள் குடும்ப செலவுக்கே போதுமாக இருக்குமா?
பதில்: கணவர் நாளார்ந்தம் உழைத்து வரும் பணத்தை கொண்டு குடும்ப ஜீவியத்தை நடாத்த போதுமானதாக இருக்கின்றது.
எனது மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும் பயன் படுத்த வேண்டியுள்ளது.
கணவர் உழைத்து வரும் பணத்தில் தான் மிச்சம் பிடித்து சமூக சேவைக்கு பயன் படுத்துவேன்.
எனது வீட்டில் மிகவும் எளிமையான முறையிலேயே சமைப்பேன். ஓவ்வொரு நாளும் ஒரு சோறு மற்றும் ஒரு கறி ஒரு சுண்டல் அவ்வளவுதான் இதைவிட வேறு கறிகள் சமைப்பதே கிடையாது.
தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் சமூக சேவையில் ஈடுபடுகின்றேன்.
கேள்வி: உங்கள் பிரதேசத்தில் அரசியல் ஜாம்புவான்கள் இத் தேர்தலில் போட்டியிடும் போது நீங்கள் வெற்றி பெற சந்தர்ப்பம் உண்டா?
பதில்: எனது வீட்டின் வலது இடது இரண்டு புறங்களிலும் இரண்டு வேட்பாளர்கள் இருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் நிச்சயம் கிடைக்கும் நான் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்.
பாராட்டுவதற்கு வாய்ப்பே இல்லை.
ReplyDeleteபரிதாபப் படுவதைப் பற்றிக் கூட சிந்திக்க வேண்டியுள்ளது.
கவலைப் படத்தான் முடியும்.
முஸ்லிம் பெண்கள் தேர்தல் குதிப்பது ஒரு புறமிருக்க, புகைப்படத்தில் இவரது உடைகளே இஸ்லாமிய வரையறைகளுக்கு முரணாக உள்ளது.
இதுவரை மேட்டுக்குடி முஸ்லிம் பெண்கள் சிலர் அரசியலில் குதித்து இருந்தார்கள். அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மைகளை விட தீமைகளே மிக அதிகம்.
தனது நோக்கம் நல்லது என்று இந்தப் பெண் சொல்லிக் கொண்டாலும், நல்ல நோக்கத்தை அடைவதற்கும் இஸ்லாம் வழி காட்டியுள்ளது. நோக்கமும் செயலும் சரியானதாக இருக்க வேண்டும்.
வாழைச்சேனையைச் சேர்ந்த கற்றவர்கள், உலமாக்கள் இந்தப் பெண்ணுக்கு அறிவுரை வழங்குவதே சிறந்தது.
பாவம் இந்தப் பெண் அதை விடப் பாவம் மேலே கருத்துச் சொல்லியிருப்பவர். நிச்சயம் இவர் அடாவடித்தனமான அரசியலை விரும்புபவர் போலும். நல்லது செய்ய யார் வந்தாலும் அவரை உட்சாயப்படுத்தவேண்டும்.
ReplyDeleteபொதுவாக சொல்லப்பபோனால் இப்பெண் அ அ யை விட பல மடங்கு சிறந்தவர்
'நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களுடன் இருக்கிறான்.'
intha penmani seyyum seyal allahvai maylum kofam oottum seyal nichchayamaha izu oru siranththa mudivay illai. allah thaan inththa pen manikku nalla arivaium eemaan ium kudukka vayndum
ReplyDeleteகருத்துச் சொல்லவந்த haseenabanu வின் நிலை ரெம்பப் பரிதாபம்.
ReplyDeleteஇந்தப் பெண்ணாவது பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது.
நல்லது செய்ய யார் வந்தாலும் உற்சாகப் படுத்துவதற்கு முன்னர்,
நல்லது செய்வதற்கும் இஸ்லாம் வரையறைகளை தெளிவாகவே
காட்டித் தந்துள்ளது.
பள்ளிவாசல் கட்ட பணம் சேர்க்கின்றேன் என்று விபச்சாரம் செய்து கலக்ஷன் பண்ண இஸ்லாம் அனுமதிக்குமா? நாம் நல்லது என்று தீர்மாநிப்பதேல்லாம் நல்லது என்று ஆகிவிட முடியாது. இஸ்லாமிய வரையறைக்குள் இருக்க வேண்டும்.
நோக்கமும், செயலும், அதாவது இரண்டுமே நல்லவையாக இருக்க வேண்டும்.
''நிச்சயம் இவர் அடாவடித்தனமான அரசியலை விரும்புபவர் போலும்''.
''நிச்சயம்'' வேறு...... அடுத்தவர் மனதில் உள்ளதை சொல்கின்றேன் என்று பொய்யை வேறு சொல்லி வீண் பாவத்தை
தேடாமல் இருக்கவும்.
WHERE IS THE ULAMAS IN VALAICHENAI? THE LADY HAVE VERY SHORT KNOWLEDGE ABOUT ISLAM.PLEASE MAKE HER UNDERSTANDING WOMEN IN ISLAM FIRST AND COMMUNITY WORK AFTER.
ReplyDeleteI TOTALLY SUPPORT La Voix cmnt.
and make sure HASEENABANU WILL GO TO STUDY ISLAM WITH THAT POOR LADY PLEASE.
dear brths in ialsam.... Assalamualaikum.
ReplyDeleteOru unmayai naam ellorum arinthukolle veandum.
Athu ennevenral inthe Electionle muslim thareppil enthe chairum peremudiyathalevu aresum matreye singele aresiyelvaathiheelum thiddemiddu seyetpaduhiraarhel'
Enevea naam ellorum oru thalaimaiththuveththin keel erukke veandum athetkaahe allah videm thua saivom.
''yaa allah muslimkelaahiye engel elloreum ottrumaiyaakku'' aaameen
மேலே பின்னூட்டம் வழங்கியுள்ள சகோதரர்களின் கவனத்திற்கு ,இஸ்லாமிய உடை என்பதனால் கருதப்படுவது யாது?இங்கு அரசியலில் குதித்துள்ள இந்தப் பெண் பலரும் விமர்சிப்பதற்கும் உலமாக்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதற்கும் காரணம் என்ன? பத்து வருடங்களை முன்னோக்கிப் பாருங்கள் .எங்கள் தாய்மார்கள் உடுத்த உடை என்ன?பெரியல் அஷ்ரப் அரசியலில் பிரவேசித்த உடை என்ன ?அபாயாவா?உடம்பு வெளியே தெரியாத ,அவ்வரத் மறைக்கப்பட்ட ,கவர்ச்சி இல்லாத அடைகளை தானே படங்களில் காண முடிகிறது?பின்னோட்டம் வழங்க சொந்தப் பெயர் பயன் படுத்த தைரியம் இல்லாதவர்கள் இஸ்லாம் பற்றிக் கதைக்க என்ன அருகதை இருக்கு?எனது மின் அஞ்சலில் இருந்து பின்னூட்டம் வழங்கியுள்ளேன்.அச்சப்படவில்லை.மேலே பின்னூட்டத்தில் பரிதாபப்படும் சகோரதரர் முடிந்தால் உங்கள் நிஜப் பெயரில் பின்னூட்டம் வழங்கலாமே?
ReplyDeleteஅரசியலில் குதித்துள்ள பெண் மணிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஷாமிலா ஷெரிப் (ஆசிரயர் ,அறிவிப்பாளர் ,எழுத்தாளர் )
www.shamilasheriff.blogspot.com
@ shamilasheriff
ReplyDeleteஒரு விடையத்தைப் பற்றி கருத்துக் கூற வருமுன்னர், அந்த விடையத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவாவது வேண்டாமா??
கருத்துக் கூற வருமுன்னர் இஸ்லாமிய வரையரைப் படியான பெண்களின் ஆடை என்ன, அவ்ரத் என்ன என்பதனை தெரிந்து கொள்ள வேண்டாமா?
பெண்கள் முகம், கைகளையும் கூட மறைக்க வேண்டும் என்ற கருத்து உலமாக்களிடம் இருந்தாலும், முகம், மணிக்கட்டுக்கு கீழே உள்ள கை என்பவற்றைத் தவிர மற்ற அனைத்தையும் பெண்கள் மறைக்க வேண்டும் என்பது பெண்களின் இஸ்லாமிய ஆடையை வரையறுக்கின்றது.
உங்களுக்குக் கவர்ச்சி இல்லை என்பதற்காக, மறைக்கப் பட வேண்டிய தலையும், கைகளும் கழுத்தும் தெரியும் படியாக புகைப்படத்தில் உள்ள, இந்துப் பண்பாட்டில் வந்த சேலையை இஸ்லாமிய ஆடையாக அங்கீகரிக்க முடியுமா?
பேரியல் அஸ்ரப் அணிந்தார், பத்து வருடங்களுக்கு முன்னர் (உங்களின்?) உம்மா அணிந்தார் என்பதெல்லாம் இஸ்லாமிய ஆதாரங்களாக, அடிப்படைகளாக ஆகிவிடுமா? ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீதனம் எடுத்தார்கள், பெண் வீட்டார்கள் வீடு கொடுத்தார்கள், வாப்பா தாலி கட்டினார் என்று சொல்லி, அவற்றையும் இஸ்லாம் என்று வாதாடுவீர்களோ தெரியவில்லை.
''அவ்வரத் மறைக்கப் பட்ட கவர்ச்சி இல்லாத ஆடைகளைத்தானே படங்களில் காண முடிகின்றது'' என்று சொல்லும் நீங்கள்,ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தும், முஸ்லிம் பெண்ணின் அவ்ரத் என்றால் என்ன என்பதனைக் கூட தெரிந்துகொள்ளாமல் கருத்துப் பதிய வந்துள்ளீர்கள் என்பது வேதனையளிக்கின்றது. பெண்களின் தலையும், கைகளும், கழுத்தும் கூட அவ்ரத் என்பது உங்களுக்குத் தெரியாதா?
சொந்தப் பெயரில் கருத்துப் பதியவில்லை என்று ரொம்பத்தான் கவலைப் படுகின்றீர்கள். சொந்தப் பெயரில் கருத்துப் பதியவில்லை என்று கவலைப் பட இங்கே என்ன திருமண சம்மந்தமா பேசுகின்றார்கள்???
''எனது மின்னஞ்சலில் இருந்து பின்னூட்டம் வழங்கியுள்ளேன்'' என்று ஏதோ பெரிய இமாலைய சாதனை செய்துவிட்டது போல பீத்திக் கொள்ளும் உங்களுக்கு, யார் வேண்டுமானாலும் வேண்டிய பெயரில் ஒரு ஈ மெயில் கணக்கை ஆரம்பிக்க முடியும் என்ற சின்ன விடையம் கூட தெரியவில்லையா?
ஒரு விடையத்தைப் பற்றி கருத்துக் கூற வருமுன்னர், அந்த விடையத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவாவது வேண்டாமா??
அப்துல் ஸலாம், வாளைச்சேனை என்ற பெயரில் ஒரு google கணக்கைத் திறந்து ,google images இல் தேடி ஒரு படத்தையும் போட்டுவிட்டால் மட்டும், வாளைச்சேனையிலிருந்து அப்துல் ஸலாம் என்பவர் உண்மையான பெயரில் கருத்துச் சொல்லியுள்ளார் என்று நம்பிவிடுவீர்களோ?
சொந்தப் பெயரைப் பயன்படுத்த வில்லை என்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். தைரியம் இல்லாமை தான் அதற்குக் காரணம் என்று கோழைகள் மட்டும் தான் சிந்திப்பார்கள்.
எனக்கு பிரபல்யம் தேவையில்லை, அதிபர், வியாபாரி, கவிஞர், கற்பனைவாதி, நடிகர் என்றெல்லாம் எனக்கு நானே அடைமொழி போட்டு அற்ப பிரபல்யம் தேடும் அற்பத்தனம் என்னிடமில்லை.
அல்லாஹ்வுக்காக, 'இந்த சமூகத்துக்கும், இஸ்லாத்திற்கும் பயனளிக்கும் விதமான கருத்துக்கள் முடிந்தவரை இந்த சமூகத்தைச் சென்றடைந்தால் போதும், அதனால் மாற்றங்கள் வந்தால் மிக்க மகிழ்ச்சி' என்ற மன நிலையில் இருப்பவன் நான்.
பிரபல்யத்துக்ககவோ, அல்லது யாரோ தரும் கூலிப் பணத்துக்காகவோ கூத்தாடுபவன் நான் அல்ல.
எதையோ எதிர்பார்த்து, இங்கே கருத்துப் பதிகிறேன் பேர்வழி என்று நாடகமாட நான் ஒன்றும் மின்னல் ரங்கா அல்ல.
எனது பதில் உங்களைப் புண்படுத்தியிருந்தால், வருத்தங்கள்.
இங்கு மட்டுமல்ல, எங்கேயாக இருந்தாலும் பதியும் கருத்தில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், ஏற்றுக் கொள்ளத் தயங்க மாட்டேன்.
எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் வந்து திமிராட்டம் போட நினைத்தால், அல்லாஹ் உங்களை இழிவு படுத்தி விடுவான்.
அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.
சகோதரரே,விதண்டாவாதம் பண்ண விரும்பவில்லை நான்.அல்லாஹ் உங்களுக்கு சத்தியப்பாதையைக் காட்டட்டும்
ReplyDelete@ shamilasheriff,
ReplyDeleteவிதாண்டாவாதம் பண்ணுவதில்லை என்ற உங்கள் முடிவு குறித்து மிக்க மகிழ்ச்சி.
இந்த முடிவை நீங்கள் உங்கள் முதல் குறிப்பை பதிய முன்னரே எடுத்திருந்தால் மிக அழகாக இருந்திருக்கும். தாமதித்து மேற்கொள்ளப் பட்டதாயினும், உங்கள் முடிவை வரவேற்கின்றேன்.
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியையும், இஸ்லாத்தின் ஏவல் விலக்கல்கள் பற்றிய தெளிவையும் தர பிரார்த்திக்கின்றேன்.
அல்லாஹ் உங்களுக்கு மன மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருவானாக.
Supper La Voix
ReplyDeleteLa Voix... Nice
ReplyDeleteoh thanks:la voix
ReplyDeletehaloo halooo argiv panna izuwa kadachazu ungaluku pls stop... srilankavai porutha warai pengal arasiyalil kuzika yoosikrapooo oru islamiya pen arasilal piravesam sollave theva illai .... pooozu pani evvalavoo irukrapooo ean inda kooodumai... muslim pen oruthiyin uruwappadam, suvarottihalilum mediakkalilum welikkattappaduvazu enda vizathil jayam... pls think pannuga ...
ReplyDeletekaruthukkal therivittha eru sararukkum nanrihal
ReplyDeleteethil aatrukkolla patta karuthaha la voix kuripitalam. eru sararukkum nanrihal
sol mathiram ellamal thangalathu kudumpathilum islam sollum wali muraiyai kondu warumaru kettukolhiren
karuthukkal therivittha eru sararukkum nanrihal
ReplyDeleteethil aatrukkolla patta karuthaha la voix kuripitalam. eru sararukkum nanrihal
sol mathiram ellamal thangalathu kudumpathilum islam sollum wali muraiyai kondu warumaru kettukolhiren
@La Voix
ReplyDeleteDear Brother, What is your view if a women enters in to the politics with Islamic dress code such as wearing Abaya or Nikab?
அஸ்ஸலாமு அலைக்கும் Shamir Shalih அவர்களே,
ReplyDeleteமுஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய ஆடை அணிந்து அரசியலில் ஈடுபடுவது குறித்து எனது கருத்து என்ன என்பதனை அறிவதனை விடவும், இஸ்லாம் எல்லா விடையங்களிலும் (அடுப்பங்கரை முதல் ஆட்சிபீடம் வரை) வழிகாட்டியுள்ளது என உதட்டளவில் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும் உறுதியாக நம்பியுள்ள நாம்,
மேற்படி விடையத்தில் தூய இஸ்லாத்தின் வழிகாட்டலை மட்டும்
ஏற்றுக் கொள்வதே சரியாகும்.
இவ்வளவு போட்டியும் சண்டைகளும் நிறைந்த இந்த தேர்தலில் இந்த பெண்ணால் தாக்குப்பிடிக்க முடியுமா? இவருடைய அரசியல் அறிவு என்ன?
ReplyDeleteஇவரை விட அரசியல் அறிவும் சமூக சேவை செய்யக்கூடிய ஆண் ஒருவர் அங்கு இல்லையா?
Sister Shamila sheriff! உங்களது வாதம் பெண்ணிளைவாதிகளின் வாதத்தை ஒத்ததாக இருப்பதாக உணரமுடிகிறது.Br La Voix இன் comment இன் நோக்கத்தை நீங்கள் பார்க்காது அவசரமாக உங்கள் கருத்தை கூறி விட்டீர்கள் என நினைக்கிறேன்.இஸ்லாமிய வரையறைக்குள் அந்தப்பெண் அரசியலில் ஈடுபடுவதை இவர் எதிர்க்கவில்லையே ?அவரது கருத்து ஆரோக்கியமனதாகத்தனே உள்ளது!இவரின் கருத்துப்படி அப்பெண செயல்பட்டால் வாக்காளர்களின் உதவியுடன் அல்லாஹ்வின் உதவியும் சேர்ந்து அப்பெண்ணுக்கு கிடைப்பதில் ஐயமில்லை அல்லவா?
ReplyDeleteSister Sharmila Shareef உங்களது கருத்தாடலில் பெண்ணிலை வாதத்தின் சாயல் தெரிவதை உணரமுடிகிறது. சகோ La Voix இன் கருத்து ஆரோக்கியமாகத்தானே உள்ளது.அவர் அப்பெண்மணி தேர்தலில் குதிப்பதன் இஸ்லாமிய வரையறை பின்பற்றப்படுவதின் முக்கியத்துவம் பற்றித்தானே குறிப்பிடுகின்றார்.அவ்வாறு நடந்தால் வாக்காளர்களின் ஒத்துழைப்பு மற்றுமன்றி அல்லாஹ்வின் உதவியும் அப்பெண்ணுக்கு கிடைக்குமல்லவா?அப்பெண தேர்தலில் இப்படியே ஈடுபடுவதை விட கொடுமையானது ஒருவரை மற்றவர் புரிந்துகொள்ள முயற்சி செய்யாதது
ReplyDeleteசகோதரர் Jalaaldeen Mohamed அவர்களே,
ReplyDeleteநான் சொல்லாத ஒரு கருத்தை எனது பதிலிலிருந்து நீங்களாக வியாக்கியானம் செய்துகொள்ள வேண்டாம்.
இஸ்லாமிய ஆடை அணிந்து பெண்கள் அரசியல் செய்வது குறித்து நான் கருத்து எதுவும் சொல்லியிருக்கவில்லை. இது குறித்து நீங்கள், சற்று மேலே Shamir Shalih அவர்களுக்கு எழுதப் பட்டுள்ள பதிலை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு முஸ்லிம் பெண் தேர்தலில் போட்டியிடுவதானது அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் செயல் என்று நீங்களாக சொந்தமாக முடிவு செய்து கொண்டீர்களா? அல்லது, தகுதியான மார்க்க அறிஞர்களிடம் கொஞ்சமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சித்தீர்களா?
மேலும், எனக்கும், shamilasheriff இற்குமிடையிலான கருத்துப் பரிமாற்றம் என்பது சற்று சூடாக ஆரம்பித்து, அழகாகவும், அமைதியாகவும் முடிவடைந்த ஒன்று. அகவே, அதனைத் தொடரத்
தூண்டுவதோ அல்லது அதிலிருந்து குறிப்பெடுத்து கருத்துச் சொல்வதோ அழகான செயலாக எனக்குத் தெரியவில்லை.