Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சராகும் வாய்ப்பு பிள்ளையானுக்கு..? அமைச்சர்கள் நம்பிக்கை

கலைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதல் அமைச்சர் வேட்பாளராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அரசாங்கத்துடன், இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அவர் SFM செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் குறித்து சில சிரேஷ்ட அமைச்சர்களிடம் வினவப்பட்டது. பெரும்பாலும், முன்னாள் முதலமைச்சரே அந்த பதிவிக்கு கூட்டமைபின் சார்பாக நியமிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும், நாளை நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயல்குழு கூட்டத்தில், இந்த நியமனம் தொடர்பாக மேலும் ஆராயப்பட உள்ளதாகவும் அந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. இதுதான் சரியான முடிவாக இருக்கும்.... ஏனெனில் இந்த முஸ்லிம் (SLMC & மற்ற..) கட்சிகளுக்கு நல்ல பாடமாக அமயும்.....அப்போவும் இந்த கிழக்கு முஸ்லிம் சமூகம் திருந்தாது, திருந்தவும் விடமாட்டார்கள்.... பிள்ளையன் வாழ்க......

    ReplyDelete

Powered by Blogger.