நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவில்லை - கோட்டாபய ராஜபக்ஸ (படங்கள்)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
குற்றம், ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை தகவல் திணைக்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதான உரையை பாதுகாப்பு, நகர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிகழ்த்தினார். துகவல் திணைக்களமும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையமும் இணைந்து இக்கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது.
தகவல், ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பளர் லக்ஷ்மன் குலுகல்ல, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆரியரத்ன அத்துகல ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் குற்றச் செயல்களை தவிர்த்தல் அவற்றில் இருந்து பாதுகாப்பு பெறல் தொடர்பாக மக்கள் மத்தியில் தெளிவான அறிவை ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
புள்ளிவிபரங்களின்படி, குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்வதற்காக, அறிக்கையிடப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்துவர் எனவும் அவர் தெரிவித்தார். அரசியல் தலையீடுகள் இன்றி, தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டுமென பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Oh ho athu sarithaan Gotabaya pona ramadhal aamikkaaraakkal grees tadaikondu matte musuleem penkalin udalaiy thadavinaarkal
ReplyDeleteIppo intha ramadaanukku unkal aamikkaaraakkal chlorophome pooddu mayakki viddu baar thadikalayum kaladdi ulle pukunthu aththanai nakaikalayum thirudukiraarkal
Unkalukkum unkal meettinkukkum etharkku makkalin panaththi oru malar shendu?