கண்களை மூடிக்கொண்டு எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது - ரவூப் ஹக்கீம்
அரசுடன் இருக்கின்றோம் என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் எமது பக்க நியாயங்களை மதித்து சாதகமாகச் செயற்பட்டால் மாத்திரமே அரசுடன் இணைந்து போட்டியிடுவது பற்றி சிந்திக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் தெஹியத்த கண்டியில் வியாழக்கிழமை இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அமைப்புகளை அமைக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில், பல்வேறுபட்ட வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தான் இன்று நான் இங்கு வந்துள்ளேன். கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தலொன்று நடைபெறவிருக்கும் நிலையில் அதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்படி செயற்படப்போகிறது என்பதை நாடு உன்னிப்பாக அவதானித்து வருவதை நான் உணர்கின்றேன்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் கட்சியின் உயர்பீடம் கூடி ஆராய்ந்தது. அங்கு பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டன. அதனடிப்படையில் நேற்று முன்தினம் நான் ஜனாதிபதியை சந்தித்து நிறையப் பேசியுள்ளேன். எமது பக்க முஸ்லிம்கள் தரப்பு நியாயங்களை நான் விரிவாக அவரிடம் எடுத்துரைத்துள்ளேன். அவரும் அவற்றை பொறுமையுடன் செவிமடுத்தார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கிய உடன்படிக்கையொன்று அரசிடம் கையளித்திருக்கின்றோம். அதனடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலிலேயே எமது முடிவு தங்கியிருக்கின்றது.
கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் அரசுடன் இணைந்து போட்டியிட்டாலும் நாம் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப் போகின்றோம்.
இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மீண்டும் கூடுவதற்கு முன்பாக இன்னொரு தடவை ஜனாதிபதியையும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்திக்க விருகின்றேன்.
அரசாங்கத்தைப் பாதுகாப்பதை விடவும் எனது சமூகத்தின் பாதுகாப்பும் இருப்பும் தான் எமக்கு முக்கியமானது. கிழக்கு தேர்தல் தொடர்பில் எமது முடிவு மக்கள் சார்ந்ததாகவே அமையும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
இன்றைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை என்னை வைத்தே கேலிச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அதனையிட்டு தான் வருத்தப்படவில்லை. அவற்றை ஆரோக்கியமானவையாக நோக்குகின்றேன் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்ண மூடிக்கொண்டு எடுக்காம, கண்ண திரந்த்துட்டு எடுங்க...
ReplyDeleteஏன்.. ஏன்...... ஏன் இந்த கொல..வெறி..... வை திஸ் கொலவெறி..
Eastern Muslims are waiting for SLMC's decision. We want our lands back. We should protect our sovereignty and birth rights in this country, specially in our home. We believe that those are robed by this present regime. We have to make the future fair and worth for our sons and daughters. So, in order to this we will not hesitate to align back TNA even.
ReplyDelete///எமது பக்க நியாயங்களை மதித்து சாதகமாக செயற்பட்டால் மாத்திரமே அரசுடன் இணைந்து போட்டியிடுவது///
ReplyDeleteஎப்போது நியாயங்களை மதித்து சாதகமாக செயற்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பா?
அப்படியென்றால் கடந்த காலங்களில் அரசாங்கம் அல்லது மகிந்த செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் மௌனமாகவே இருந்தது!!!
தேர்தலுக்கு பிறகு நியாயங்களை மதித்து செயற்பட வேண்டுமா?
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாத பீரங்கிகளை வைத்து கொண்டு எவ்வாறு செயற்படும். அல்லது எதிர்காலம் பற்றி நீங்கள் அறிவீர்களா?
முடிவை இவ்வாறு எடுங்கள்............
அனைத்து முஸ்லிம்களும் ஒன்றாக தனித்து போட்டியிடுங்கள்.
இன்ஷா அல்லாஹ் வெற்றியின் பின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவதானித்து முடிவெடுங்கள்.
இப்பொழுதே அவர்களின் ஆம் என்ற தலையாட்டலுக்கு எமது சமூகத்தை காலடியில் போட வேண்டாம்.
நீங்கள் என்ன செய்வீர்களோ? அல்லாஹ்தான் எமது சமூகத்தை காப்பாற்ற வேண்டும்.
தம்புள்ள, தெஹிவள.......... எமது பள்ளிகளை அகற்ற முற்பட்ட போது நீங்கள் உண்மையான முஸ்லிம்கள் என்றால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஏதோ எல்லாம் பேசினீர்களே தவிர............ அரசாங்கத்தின் எலும்பு துண்டுகள்தான் உங்களுக்கு தேவையாக இருக்கிறது.
இன்னும் அரசாங்கம் எமது பள்ளிகள் பற்றி ஒரு முடிவும் கூறவில்லை.
ரிசாத் அவர்களே.........
அபிவிருத்தி அபிவிருத்தி என்றும் மகிந்த சிந்தன என்றும் கூவிக்கொண்டு இருப்பதில் எமது மக்களுக்கு விமோசனம் இல்லை.
அவர்களது அடிப்படை உரிமைகள், மத உரிமைகள் பெற்று கொடுக்க உதவி செய்யுங்கள்.
எதிர்கால சந்ததியை மனதில் வைத்து செயலாற்றுங்கள்.
அல்லாஹ்வின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
முஸ்லிம் மக்களே,
சிந்தியுங்கள்
உங்கள் குழந்தைகள் எதிர்காலம் பற்றி.............
பணம் இருப்பவன் பறந்திடுவான் பரதேசம்
இல்லாதவன் ...........................................................
இங்கு நடக்கின்ற அரசியல் காய் நகர்த்தல்கள் சமூகத்திக்கு நன்மை பயக்குமா என்பதை மட்டும் ஆராயுங்கள்.. அரசின் நகர்வுகள் ஒவ்வொன்றும் எமக்கு தெரிந்ததே…. தேர்தலுக்கு முன்பான வாக்குறுதிகளை செல்லாக் காசுக்குவதில் கை தேர்ந்த அரசு.. அச் செல்லக் காசுக்கு நியாயம் கற்பித்து வக்காலத்து வாங்குவதில் சில குறு நில மன்னர்கள் கெட்டிக் காரர்கள்….. முஸ்லிம் காங்கிரஸ் பட்ட அனுபவங்களை வைத்து உரிமைகளுக்காக சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும்…. இத் தேர்தலில் தனி நபர் அரசியல் வாழ்க்கைகாக முடிவுகளை எடுப்பார்களாயின்.. வெகு விரைவில் அது முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணியாகவும்.. புதிய தலைமைத்துவத்தின் உதயமாகவும் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை…. அபிவிருத்திகளை செய்த பின்பு நடு சந்திகளில் சிலை வைக்கவும் அனுமதி கொடுக்க நமது கோடாரிக் காம்புகள் தயங்க மாட்டார்கள்…
ReplyDelete- தாரிக் -