முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளர் பைசால் காசீம்..??
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் களமிறங்கவுள்ளார்..?
தாருஸ்ஸலாமில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அதியுயர் பீட கூட்டத்தினை அடுத்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பைசால் காசீம் இராஜினாமா செய்வார்.
"முதமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் நியமிக்கப்படுவார் என அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டால் மாத்திரமே அவர் போட்டியிடுவார்"
நிந்தவூரில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பினையடுத்து, ஹெலிக்கப்பட்டர் மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழுமை வந்தடைந்துள்ளார்.
பைசால் காசீம் எம்.பி. பதவியையும் இழந்து, முதலமைச்சர் பதவியும் இல்லாமல் ஒரு சாதாரண மாகாணசபை உ உறுப்பினராக்கும் தார்மீக பொறுப்பை ஹக்கீமின் கையில் எடுத்துள்ளார் என்பதை நிருபிக்க மிக நீண்ட நாட்கள் செல்லாது மக்கள். பொறுத்திருங்கள் செப்டம்பர் வரைக்கும்.... சம்மாந்துறை மக்களின் ஆதரவை திரட்ட செய்யப்பட்ட இது ஒரு சதி என்பதை நிந்தவூர் மக்கள் விழங்க மிக நீண்ட நாட்கள் செல்லாது.....
ReplyDelete