Header Ads



இந்தியாவுக்கு இஸ்லாமிய வதிகளினால் ஆபத்து - அமெரிக்கா எச்சரிக்கை

சுவனப்பிரியன்

நம்ம பெரியண்ணன் சொல்லிட்டாக! இந்தியாவில் சமீப காலமாக பெரும் மோதல்களோ இனப் பிரச்னைகளோ எழவில்லை. இதனால் உடன் அமெரிக்காவின் மூக்கில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவில் இல்லாத பல அமைப்புகளின் பெயர் பட்டியலை தனது மக்களுக்கு கொடுத்துள்ளது அமெரிக்கா. தனது நாட்டு மக்கள் இந்தியாவுக்கு சென்றால் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை கசிய விட்டுள்ளது.

இனி சிஐஏ யின் ஏஜண்டுகள் சிலர் சில வறிய முஸ்லிம்களை வாடகைக்கு அமர்த்துவார்கள். இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு இத்தனை லட்சம் சென்று விடும் என்ற ஆசையும் காட்டப்படும். அமெரிக்கா சொல்லிய அனைத்து இடங்களிலும் கச்சிதமாக பல நாச வேலைகளை சிஐஏ யின் ஏஜண்டுகள் மொசாத்தின் எஜண்டுகள் உள்ளூர் ஆட்கள் உதவியோடு செய்து முடிப்பார்கள். குண்டு வெடித்தவுடன் ஏதாவது ஒரு ப்ரௌசிங் சென்டரில் சிஐஏ யின் உளவாளி 'நான்தான் இந்தியன் முஜாஹிதீன். நான் தான் குண்டு வைத்தேன்' என்று கூறுவான். நம் ஊடகங்களும் கண் காது மூக்கு வைத்து செய்திகளை இன்னும் சுவாரஸ்யமாக மக்களுக்கு தரும். அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு 20 வருடம் சிறை வாசத்துக்கு பிறகு குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்ற பழைய பல்லவியை பாடி விடுதலை செய்யப்படுவார்கள். இதற்குள் பல மில்லியன் ஆயுத வியாபாரமும் அமெரிக்காவால் நடத்தப்பட்டு விடும்.

அமெரிக்கா இவ்வாறு மற்ற நாடுகளின் ரத்தத்தில் தனது நாட்டு மக்களை சுபிட்சமாக வைத்திருப்பதற்கு பதில் உலக நாடுகள் அனைத்திலும் வருடம் இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம். மனித உயிர்களாவது மிஞ்சும். ஒபாமா நடவடிக்கை எடுப்பாரா?

சவுதி அரேபியா இதைத்தான் செய்து வருகிறது. வருடா வருடம் இத்தனை மில்லியன்கள் ஏதோ ஒரு காரணத்தை வைத்து அமெரிக்காவுக்கு தந்து விடுவதால் வாலை ஆட்டிக் கொண்டு சவுதி உள் நாட்டு பிரச்னைகள் எதிலும் தலையிடுவதில்லை. இதை ஏன் மற்ற நாடுகள் பின்பற்றக் கூடாது? :-)

No comments

Powered by Blogger.