அண்ணன் சிவசிதம்பரத்தின் மறைவுக்காக அழுதுள்ளேன் - ரவூப் ஹக்கீம்
அஸ்ரப் ஏ ஸமத்
விடுதலைப்புலிகள் வடபுலத்தில் இருந்து முஸ்லீம்களை அகற்றியதை அண்னன் சிவா அன்று கண்டித்தார். அத்துடன் முஸ்லீம் மக்கள் மீள குடியேறும் வரை நான் ஒருபோதும் யாழ்ப்பாணத்துக்கு செல்வதில்லை. என கல்முனையில் மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி மைதாணத்தில் முஸ்லீம் காங்கிரஸ் தேசிய மாநட்டில் மறைந்த சிவசிதம்பரம் மிகவும் ஆக்ரோசமாகவும் கவலையுடன் பேசினார். அவரது இந்தப் பேச்சினால் அந்த அரங்கே அதிர்ந்து போயிருந்தது.
கல்முனையில் நடைபெற்ற முஸ்லீம் காங்கிரஸ் மாநாட்டில் அண்னன் சிவா அந்த அமர்வில் ஆற்றிய உரை இன்றும் எமது நெஞ்சில் அகலாமல் உள்ளது.
மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நீதிஅமைச்சருமான றவுப் ஹக்கீம் முன்னாள் எம்.பி மு.சிவசிதம்பரத்தின் நினைவுப் பேருரையை நேற்று(21) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்த்தும்போது தெரிவித்தார்.
இந் நிகழ்வினை கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வின்போது கந்தையா நீலகண்டன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.கே சிவசந்திரா சட்டத்தரணி வே.விமலராஜா ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் பேசும் சமுகத்தின் தனக்கென ஒரு சரித்திரம் படைத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்ர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான அண்னன் மு. சிவசிதரம்பரம்.
நான் சட்ட உதவியாளராக கந்தையா சிவானந்தாவின் தொழில்செய்யும்போது அண்னன் சிவா மேல்நீதிமனறத்தில் பல வழக்குகளிள் வாதாடி உண்மைத் தாப்பிரயங்களை கொண்டுவரும்போது அதனை நான் வழக்காடும் மன்றத்தில் இருந்து அவதாணித்துள்ளேன். அவர் ஆஜானபகவான் போன்றதொரு சிம்மக்குரலோன். அவரது கம்பீரமான தொணியில் அவர் பல வழக்குகளை வாதிடுவார்.
அவரது அந்திம காலத்தில் சக்கர நாற்காலியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த காலத்தில் அவர் எதிர்கட்சியில் இருந்து ஆற்றிய சொற்கள் இன்றும் எனது நெஞ்சினில் நினைத்துப்பார்க்கக் கூடியதாக உள்ளது.
ரணில்விக்கிரமசிங்க அவர்களது இரண்டு வருட ஆட்சியில் அந்த அரசினை ஆட்சியில் அமைத்த கட்சி என்றதற்காக அன்று முக்கிய பொறுப்புவாய்ந்த அமைச்சு தரப்பட்டது. அக் காலத்தில் அண்னன் சிவா இறந்தார். அவரது உடல் கரவெட்டியில் சோனத்து குடும்ப மயாணத்தில் பூதவுடல் அடக்கம் செய்யபட்டது. அன்று எனக்கும் அவர் பற்றி பேசுவதற்கு அழைத்தார்கள் அந் தருணத்தில் அவர் கல்முனையில் பேசிய பேச்சுக்களை பேசும் போது எனது குரல் தடுதடுத்து அழுதுகொண்டேன் அப்படிப்பட்ட ஒரு தலைவர் அண்னன் சிவா அவர்கள் எனக் கூறினார் அமைச்சர் றவுப் ஹக்கீம்.
Post a Comment