Header Ads



இஹ்வான்களே உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை - பலஸ்தீன் கோரிக்கை



எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸியுடன் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபலஸ்தீன்-எகிப்து உறவு, ஃபலஸ்தீன் நல்லிணக்கம், சுதந்திர ஃபலஸ்தீன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

அதிபர் தேர்தலில் அமோக வெற்றியை பெற்ற முஹம்மது முர்ஸிக்கு வாழ்த்து தெரிவித்த மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலுக்கு எதிராக எகிப்தின் பரிபூரண ஆதரவு தங்களுக்கு தேவை என்பதை அவரிடம் தெரிவித்தார். முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் இஸ்ரேல் விவகாரத்தில் தனது நிலைப்பாடு இருக்கும் என முர்ஸி தன்னிடம் உறுதி அளித்ததாக அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

2 தினங்கள் சுற்றுப் பயணத்திற்காக மஹ்மூத் அப்பாஸ் கடந்த செவ்வாய்க்கிழமை கெய்ரோ வருகை தந்தார். முர்ஸியை சந்தித்த அப்பாஸ், எகிப்து ராணுவ தலைமை தளபதி ஹுஸைன் தன்தாவியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

No comments

Powered by Blogger.