Header Ads



தேசபற்று நாடகமும், நிலையான தீர்வுத்திட்டமும்..!


எம் .எச் முஹம்மத்

யுத்த கூக்குரல் ஓய்ந்த நாட்டில் இன்னும் தமிழ் மக்களின்  அழுகுரல் ஓயவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எங்கு போய் ஒப்பாரி வைத்தும் நடப்பது எதுவோ அது நன்றாகவே நடந்து கொண்டே இருக்கிறது நாட்டில்.

வடக்கில் அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருவதாக தெரிவிக்கபடும் நில ஆக்கிரப்பு, தொடர்பாக நிருபிக்க தாயாரக இருப்பதாக த.தே.கூ செயலாளர் மாவை சேனாதிராஜா யாழில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் அரசியல் பேசவும் அல்லது நிரந்த தீர்வினை தேடவும் ஏராளமான சமகால தலைப்புக்கள் முஸ்லிம்,தமிழ் மக்களுக்கு தற்சமயம் கையிருப்பில் இருக்க, தென்னிலங்கையின்  தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர ஜ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையும், இந்தியா பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் எதிர்கால இலங்கை வரவுக்கு சிவப்பு கோடி தூக்கியுள்ளார். ஜெனிவாவில் நாடு எதிர்கொண்ட பலத்த சாவால்களுக்கு ஈடுகொடுக்க இன்றைய அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்க்கு அள்ளி வழங்கியுள்ள வாக்குறுதிகளை மறந்த வண்ணம் அல்லது மறைத்த வண்ணம் இந்த தேசபற்று நாடகம் காலத்துக்கு ஏற்றவாறு நாட்டில் அரங்கேற்றுவதன் நோக்கம் தென்னிலங்கை சமூகத்தை அரசியல் மடையர்கள் ஆக்குவதே ஒழிய வேறு எதுவாக?? இருக்க முடியும்.

மேலும் இவர்களின் வருகையால் இலங்கையின் இறைமையில் பேராபத்து இருப்பதாக எச்சரிக்கை மணி அடித்து காட்டும் இவர் அவர்களின் வருகை தொடர்பான உண்மை நிகழ்ச்சி நிரலை வெளிபடுத்த அரசாங்கத்தை கோரியுள்ளார். நிதர்சனமாக முன்னால் இரானுவ தளபதி பொன்சேகாவின் திடிர் விடுதலையுடனேயே ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமெரிக்காவும், புது டெல்லியும் எப்போழுதுதோ கைகோர்த்து வெற்றி பெற்றதை மறந்து விட்டார். இலங்கை போன்ற சிறிய நாடுகளை காலடியில் கொண்டுவரும் அமெரிக்கா போன்ற  வல்லரசுகளின் சாணக்கியத்தை உணராமல் தேசபற்று நாடகம் போடுவது அரசியல் நையாண்டித்தணத்தின் உச்ச கட்டம் எனலாம். இது போன்ற நையாண்டித்தனமான நாடகங்களிள் சிறப்பான பாத்திரங்களை தேசிய சுதந்திர முன்னனி தலைவர் 'மவ்பிம பஞ்சாயுத' அமைச்சர் விமல் விரவங்ச சிறப்பு வேடம் ஏற்று அரங்கேற்றிய பல சந்தர்பங்களும் நாட்டில் இடம்பெற்றதை நாம் அறிவோம்.

தம்புள்ள பள்ளிவாயளிளும், தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு நியாமாக கிடைக்க வேண்டிய சகல உரிமைகளிளும் , ஊனக் கண்களாள் தேடி பார்க்கபடும் தேசிய பற்று, பௌத்த உரிமை, தேசிய ஒருமைப்பாடு போன்ற விடயங்கள் எந்த தருணத்திலும் ஞான கண்களை  கொண்டு சிறுபான்மை சமூகத்தை சராசரி இலங்கையராக பார்க்க முனைந்ததே வரலாரே இவர்களிடம் கிடையாது. சரி வேண்டாம் இருக்கட்டும், இந்த தேச பக்கதர்கள் நம் நாட்டில் அபிவிருத்தியின் பெயரால் நாம் நாடு வாங்கியுள்ள அல்லது வாங்க போகும் சர்வதேச கடன்கள்,  அவர்கள் இடும் நிபந்தனைகள் தொடர்பாக அல்லது தெரிவிக்கபடுகின்ற நாட்டின் ஊழல் நிலை  தொடர்பாகவோ ஏன் தமது தேசபற்றினை பறைசாட்டும் விதமாக காய் நகர்த்த அடியெடுத்து வைப்பதில்லையோ தெரியாது. ஒரு வேளை முஸ்லிம் தமிழ் சமூகத்திற்க்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்கு முட்டு கட்டை போடுவது மாத்திரமே தென்னிலங்கை அரசியல் கருத்தியல் ஆளர்கள் கொண்டுள்ள தேசப்பற்றுக்கான வரைவிலக்கனமோ???? என்பதை மக்கள் அனைவரும் இலங்கையராக சிந்திக்க  வேண்டும்.

காலத்திற்க்கு ஏற்ற தேசபக்தி நாடகத்தில்  ஆட்சியாளர்கள் போடும் அரசியல் தாளம் தென்னிலங்கைக்கு ஒரு ராகத்திலும் ,சர்வதேச அரங்கில் இன்னொரு ராகத்திலும் அமைந்திருப்பது வேதனைக்குரியது. நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை முழுமையாக நடைமுறைபடுத்து முதல் வடமாகாண சபைத்தேர்தல் வரை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்க்கு முடித்து காட்ட வேண்டிய இலக்குகள் பலநூறு இருக்க யாவுமே கிடப்பில் போடபட்டுள்ளமை ஆட்சிக்கும் சாவாலை தொடர்ந்து தோற்றுவிப்பதுடன் நாட்டில் இனவாத அரசியலையும் இன்னும் மிடுப்பாக்கி உலாவவிடுகிறது.

யுத்தம் முடிந்த கையோடு வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம்,வடமாகண சபைத்தேர்தல் ,13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்களை திருப்தியடையச்செய்யும் அதிகார பாரவலாக்கம் போன்ற ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை அரசாங்கம் தோற்றுவிக்காமல் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நாடாத்தி காட்டுவதில் சாதனை என்ன இருக்கிறது. ஒரு வேளை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பதவி நாற்காலி ஓரம் ஆக்கபடலாம் ?! அங்கு அரசாங்கத்தின் நேசத்திற்குரிய புதியவர் கொண்டு வரப்படலாம். இது தவிர தம் தலைகாக்க உலக்கு அள்ளியெரிந்த வாக்குறிதிகளின் உண்மை நிலை என்ன????  தீர்வு வழங்குவது தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழு விடயம் பச்சை தண்ணியில் பொரித்த பப்படமாக இருக்க வடமாகண மீள்குடியேற்றத்திற்க்கு கன்னி வெடி அகற்றுவதை காரணம் காட்டுவதை சர்வதேசம் வெந்நீரில் பப்படம் பொரிக்கும் முயற்சியாகவே நோக்க முற்படாது என்பதற்க்கு என்ன நிச்சயம் இருக்கிறது.

எதிர்வரும் நவம்பர் முதல் வாரம் ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் நிலை மீளாய்வு செய்யபடவோதாக தெரிவிக்கபடுகிறது. இந் நிலையில் சர்வதேசத்தின் அழுத்தங்களின் இறுக்கபிடியை தளர்த்த அரசாங்கம் காத்திரமான நகர்வுகளை இனி முன்னெடுக்க வேண்டும். வெளி விவாகாரத்துறை அமைச்சரை  அடிக்கடி பட்டம் போல பறக்க வைத்து  சர்வதேசத்திடம் கால அவகாசம் வாங்கிவரச் சொல்லி காலம் கடத்துவதில் இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் எவ்வித நன்மையையும் காண போவதில்லை.


 

No comments

Powered by Blogger.