ஹொஸ்னி முபாரக் மீண்டும் சிறையில் அடைப்பு
ராணுவ மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்றுவந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்ல உத்தரவிடபட்டுள்ளது. எகிப்து முன்னாள் அதிபரான ஹோசினி முபாரக்(85). கடந்த ஆண்டு நடந்த மக்கள் புரட்சியால் பதவி விலகினார். அதிபராக இருந்த போது ஊழல் செய்தது மற்றும் அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
கெய்ரோ சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நல குறைவால் ராணுவ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது இவர் குணமடைந்துவிட்டதாக டாக்டர்கள் குழு அளித்த அறிக்கையின் படி அவர் மீண்டும் கெய்ரோவில் உள்ள டோரா சிறையில் அடைக்க அரசு உத்தரவி்ட்டது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் அப்துல் மெகாதி முகமது , இதற்கான உத்தரவினை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து முபாரக் , மீண்டும் கெய்ரோ சிறையில் அடைக்கப்பட்டார்.
Post a Comment