Header Ads



தேர்தலுக்கு உதவும் பேஸ்புக்

பிரபல சமூக இணையத்தளமான பேஸ் புக் மூலம் வாக்காளர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரலாம் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் முதல் முறையாக இந்த திட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் பிறந்த திகதி உள்ளிட்ட விபரங்கள் மாத்திரமே சமூக இணையத்தளமான பேஸ் புக் ஊடாக பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இந்த நடைமுறையை ஏனைய மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு குறித்த மாநிலங்களின் சட்டசபையின் அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது.

எனினும் இணையத்தளம் மூலம் வாக்காளர்களின் பெயர் விபரங்கள் திரட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

No comments

Powered by Blogger.