Header Ads



பூமிக்கு அருகே உயிர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு


தினக்குரல்

பூமிக்கு அருகே மேலும் புதிய கிரகம் இருப்பதை கலிபோர்னியா விண்வெளி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர்.

22 ஒளி வருட தூரத்தில் உள்ள இந்த கிரகத்திற்கு 'கிளிசெ 581ஜி' என்று பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு இருமடங்கு பெரிதாக உள்ள இந்த கிரகத்தில் உயிர் வாழ முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி ஸ்டீபன் வோட் கூறுகையில், இங்கு திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது என்றும் அவை மேற்பரப்பில் உறைந்து கிரகத்திற்குள் பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.