ஒபாமா அரசாங்கத்தில் இஹ்வான்கள் ஊடுருவியுள்ளார்களாம்..!
ஒபாமாவின் அரசில் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அனுதாபிகள் ஊடுருவி கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்க பெண் செனட்டரின் குற்றச்சாட்டு அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குடியரசு கட்சியைச் சார்ந்த மிச்சேல் பாச்மான் என்பவர் தாம் சில தினங்களுக்கு முன்பு இக்குற்றச்சாட்டி எழுப்பினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனின் துணை சீஃப் ஆஃப் ஸ்டாஃப் ஹுமா ஆபிதீன் இஃவானுல் முஸ்லிமீனின் அனுதாபி எனவும், ஹிலாரியிடம் தனது செல்வாக்கை அவர் பயன்படுத்துகிறார் என்றும் பாச்மான் குற்றம் சாட்டினார்.
ஒபாமா அரசில் இன்னும் சிலரும் இஃவானுல் முஸ்லிமீன் அனுதாபிகளாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆகையால் இதுக்குறித்த விசாரணை தேவை என்று மிச்சேல் பாச்மான் கூறுகிறார்.
அமெரிக்காவில் பிரபல முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான டெமோக்ரேடிக் பிரதிநிதி கீத் எலிஸன் இஃவானுல் முஸ்லிமீன் ஆதரவாளர் என மிச்சேல் குற்றம் சாட்டுகிறார்.
அதேவேளையில், அடிப்படையற்ற இக்குற்றச்சாட்டுக்களை எழுப்பும் முன்னர் ஆதாரங்களை ஆஜர்படுத்த எலிஸன், மிச்சேலுக்கு சவால் விடுத்துள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட ஆதாரங்கள் தேவை என அவர் கூறியுள்ளார்.
ஒபாமா அரசில் முஸ்லிம் செல்வாக்கை வேரோடு கிள்ளியெறிய வேண்டும் என கூறும் மிச்சேலை இஸ்லாமியஃபோபியா விழுங்கிவிட்டதாக பிரபல அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.
நிச்சயமாக இது நிகழத்தான் போகிறது ..இக்ஹ்வனுள் முஸ்லிமீன்கல் சக்தி உள்ளவர்களல்ல ..மாறாக அவர்கள் சுமந்திருக்கும் இஸ்லாம் மிகவும் சக்திபெற்றது...நிச்சயமாக ..யூதர்கள் பயப்படுகின்ற விடயம் நடக்கத்தான் போகிறது.......
ReplyDeleteInsha Allah
ReplyDelete