Header Ads



சவூதி அரேபியாவின் மறுபக்கம்..!


மு.உ.

உலகில் மிகப்பெரிய மசகுஎண்ணெய் ஏற்றுமதி செய்யும் நடான சவூதிஅரேபியாவில் 60சதவீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவருவதாக சவூதிஅரேபியப்  பத்திரிகையொன்று தொவிக்கின்றது.
 
சவூதிஅரேபியா வருடாந்தம் 1500 பில்லியன் ரியால் (400பில்லியன் அமெரிக்கடொலர்) பணத்தை சம்பாதிக்கின்றதுடன். சாதாரண சவூதிஅரேபிய குடிமகன் ஒருவரின் வருமானம் 1500 ரியால்களிலும் (400 அமெரிக்க டொலர்) குறைவாகவே காணப்படுகின்றது என சவூதிஅரேபியப்பத்திரிகை தொவிக்கின்றது.
 
எனினும் 22 சதவீதமான, அல்லது 3 மில்லியன் சவூதி அரேபிய மக்களே வறுமைக் கோட்டின்கீழ் வாழ்வதாக சவூதிஅரேபிய ஆலோசனை சபையின் (மஜ்லிஸ் அஸ்ஸூரா) அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 
சவூதிஅரேபியா,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவிகள் வழங்காமல் பலமில்லியன் பெறுமதியான ஆயுதங்களை மேற்குநாடுகளிடமிருந்து கொள்வனவு செய்துவருவதாக சவூதி செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர்.
 
2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து 60 பில்லியன் அமெரிக்கடொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்யதது. இது அமெரிக்காவின்  ஆயுதவிற்பனை வரலாற்றில் மிகப்பெரும் தொகையாகும் என வொஷிங்டன் புகழ்ந்துரைத்தது. உலகின் மிகப்பெரும் மசகுஎண்ணெய் மற்றும் கறுப்புத்தங்க ஏற்றுமதி நாடாக சவூதி அரேபியா காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.