பெரட்ரிகா ஜான்ஸ்க்கு கொலை அச்சுறுத்தல்
(இக்பால் அஜீட்)
சண்டே லீடர் ஆங்கிலப்பத்திரிகை ஆசிரியர் பெரட்ரிகா ஜான்ஸ்க்கு கேவலமாகத்தீட்டி கொலை அச்சுறுத்தல் - கொடிகட்டிப் பரக்கிறது கோத்தாவின் புகழ்!
5.7.2012 காலையில் சண்டே லீடர் வாரப்பத்திரிகை பிரதான ஆசிரியர் பெரட்ரிகா ஜான்ஸ், கோத்தபாய ராஜபக்ஷவிற்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்துகிறார்.
சம்பாசனை இவ்வாறு தொடர்கிறது.
FJ: “I do not know if you are aware ….. that a Sri Lankan airline flight is to fly toZurich …to fly a puppy dog for you”
MR: “Yes, they are bringing a puppy – it is for my wife… I have every right not to bring a dog but an elephant if I so wish… they brought a dog for me…”
FJ: “The decision was reversed only after the President of the Pilot’s Guild objected”
MR “Nobody objected. If you write any bloody thing I will sue you. I am not afraid of the bloody Courts. I have already sued you and will sue you again. That is my right”.
FJ: “Yes. But it is also my right as a journalist to ask you for your side of the story or clarify this with you since it involves you.
GR “I am telling you again, I will sue your f……g newspaper”
FJ “Mr Rajapaksa, are you threatening me?
GR “Yes”. He then hung up.
GR “If these pilots are idiots to change a plane for this, that is not my fault. They are f…..g idiots”
FJ “I have decided to hold the story but want you to know that I am not doing so because you threatened me yesterday….”
GR “Yes I threatened you. Your type of journalists are pigs who eat shit. Pigs who eat shit. Shit! Shit! Shit journalists”.
GR “I will put you in jail. You shit journalists trying to split the country – trying to show otherwise from true Sinhala Buddhists. You are helped by theUS Ambassador, NGOs……..They pay you”
FJ “I wish”.
GR “You pig that eats shit. You shit, shit, dirty f….g journalist”
FJ (commendably keeping her cooland refusing to get into the gutter) “I hope you can hear yourself Mr. Rajapaksa”
GR “People will kill you. People hate you. They will kill you”
FJ “On your directive?”
GR “What? No. Not mine –but they will kill you – you dirty f…ing shit journalist”.
நாகரீகம் கருதி சம்பாசனையை மொழிமாற்றம் செய்யாமல் தவிர்க்கிறேன். ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாயா தனது மனைவிக்கு நாய்க்குட்டியொன்றை சுவிஸர்லாந்து, சுரிச்சிலிருந்து கொண்டுவருவதற்கு முயற்சித்திருக்கிறார். மஹிந்தவின் மருமகள் மதினி சந்ரதாசவின் டிபோய் கபிரண்ட் கப்டன் பிரவீன் விஜயசிங்க, நாய்க்குட்டியை சுரிச்சிலிருந்து கொண்டுவரும் ஒப்பரேசனுக்கு களமிறங்கியிருக்கிறார். ஆனால் இடையில் ஒரு பிரச்சனை... சுரிச்சுக்கு போகும் இலங்கை அரசுக்கு சொந்தமான சிறீலங்கன் எயார்லைன் யு340 ஐ செலுத்தும் சான்றிதழ் இவரிடம் கிடையாது. எனவே யு340 விமானத்துக்கு பகரமாக யு330 தர சிறிய விமானத்தை சுரிச்சுக்கு பறக்கவிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. விமானம் மாற்றப்படுமானால் சுரிச்சுக்கு பயணிக்கவிருந்த பயணிகளில் 56 பயணிகளை இடைநிறுத்த வேண்டியேற்படும். விமான மாற்றம் இடம்பெறப்போகிறது என்ற செய்தி ஜான்ஸ்க்கு எட்டியதுடன் தேசிய வருமானத்தில் ஒரு மோசடி இடம்பெறுகிறதா என்ற வினாவுடன் ஒரு ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் குறித்து கோத்தாவுக்கு தெரியுமா என்று அறியும் முகமாக ஜான்ஸ் கோத்தாவுக்கு அழைப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த அழைப்பின்போது கோத்தாவின் கொந்தளிப்பைத்தான் ஆங்கிலத்தில் மேலே வாசித்தீர்கள்.
இந்த சம்பாசனையை வாசிக்கின்றபோது ஒரு நாட்டின் பாதுகாப்பு செயலாளரின் வார்த்தைகளா இவை அல்லது பாதாளலோக மாபியா ஒருவனின் வார்த்தைகளா இவை என வியக்கத்தோன்றுகிறது. மாபியாக்காரன் கூட ஒரு பிரபல ஊடகவியலாளர் ஒருவரிடம் இவ்வளவு அடிமட்ட வார்த்தைகளை பாவித்து முட்டாள்தனமாக பேசமாட்டான். இலங்கையில் இரண்டாவது பலமிக்க தலைவராக இருக்கக்கூடடிய நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர் ஒருவருக்கு மிக அசிங்கமான தூசன வார்த்தைகளால் பகிரங்கமாக தூசித்திருப்பதும், நீதித்துறைக்கு எதிராக மிகவும் பகிரங்கமாக சவால்விட்டிருப்பதும் நான் அறிய இதுவே முதற்தடவையாகும். இவ்வாறு நாட்டில் பாரம்பரியமாக இருக்கும் அனைத்துக் கட்டமைப்புகளினதும் சட்டம் ஒழுங்குகளையும் தனது அதிகாரச் சப்பாத்துக்கு கீழே போட்டு மிதித்து, அகங்காரமாகவும் மனநோயால் பாதிக்கப்பட்டவரைப்போலும் செயற்படும் ஒருவர் நாட்டின் அதியுயர் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பில் இருப்பதானது இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் முழுமையாகவே செயலிழந்துள்ளமையையே எடுத்துக்காட்டுகிறது.
இன்றும் பல நாடுகளில் கேவலமான முறையில் ஒரு அரச அதிகாரி செயற்படுவாரேயானால் அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்படுவதையும்; சட்டத்தின் முன் அவர் நிறுத்தப்படுவதையும் நாம் கண்டுள்ளோம். ஆனால் எமது நாட்டிலோ காட்டு தர்பார் நடப்பதைப்போல அரச அதிகாரிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் கண்டுகொள்ளப்படாது தொடர்கின்றன.
நாட்டில் ஊடகங்கள் அரசாங்கத்தலைமைகளுக்கு பயந்து சுயதணிக்கையில் ஈடுபட்டு வரும் விடயம் தொடர்பாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பிடம் பிரட்ரிகா ஜான்ஸ் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இதற்கு முன்னரும் அவர் பல முறை எச்சரிக்கப்பட்டிருக்கிறார். 8.1.2009 இல் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொழும்பில் பட்டப்பகலில் இராணுவ சோதனை சாவடிகளுக்கு நடுவில் படுகொலை செய்யப்பட்;ட சம்பவமும் அரசாங்கத்திற்கு எதிரான அவரது நிலைப்பாட்டுக்கு கிடைத்த பரிசு என்பதையும் லசந்தவை கொன்றவர்கள் இன்றுவரை நீதிக்குமுன் நிறுத்தப்படவில்லை என்பதையும் நாம் மறக்கலாகாது.
எனவேதான் எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு அவர்கள் தயாரித்துள்ள 'ஊடகத்தின் கொலை காரார்கள்' என்ற பட்டியலில்; மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரின் சகோதரர்களின் பெயர்களையும் இணைத்துள்ளது எமது நாட்டுக்கே அசிங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 2010 இல் கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போய் இன்றுவரை அவருக்கு என்னவாகியது என்று தெரியாமல் இருக்கிறது. புத்தல ஜயந்த, கீத் நோயர் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். பதிவிலக்கம் அகற்றப்பட்ட வெள்ளை வேன்களைக் கொண்டு தமது அநியாயங்களுக்கு இடைஞ்சலாய் உள்ளவர்கள் கடத்தப்படுவது கேள்வி கணக்கற்று இடம்பெறுகிறது. சுருக்கமாகச் சொன்னால் அரசுக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எதிராக எதுவும் எழுதாது அவர்களுக்கு வக்காளத்து வாங்கி ஊடகங்கள் செயற்பட்டால் மாத்திரம்தான் ஊடகங்கள் இலங்கையில் இயங்கமுடியும். அது அரச ஊடகமாக இருந்தாலும்சரி. தனியார் ஊடகமாக இருந்தாலும் சரி. இந்த நிலைப்பாட்டுக்கு மாற்றமாக யாரேனும் செயற்பட்டால் அவர்களின் குரல்கள் குரல்வளைகள் அறுக்கப்பட்டாயினும் நிறுத்தப்படும். இந்நிலையில் இன்று உண்மையை வெளியில் கொண்டுவருவதற்காக ஒரு பாரிய விலையை செலுத்த எந்த ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரில்லை.
இவ்வாறு நியாயம் நீதி அற்ற ஸ்தம்பித நிலையை நாட்டில் காண்கிறோம். சிவில் சமூகச்செயற்பாடுகளை பீதி முழுமையாக காவு கொண்டுள்ளது. ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் ராஜபக்ஷ குடும்பத்தின் கால்களில் மண்டியிட நேர்ந்துள்ளது. இவ்வாறு நாட்டில் உருவாகி வரும் நிலையை அவதானித்தால் நாடு சட்டத்தின் ஆட்சியை முழுமையாக இழந்து வருவதையும், ஊடகங்களுடன் நாட்டின் கோத்தபாய போன்ற உயர்மட்டத் தலைவர்கள் சகிப்புத்தன்மையற்ற முறையில் நேரடியாக மோதி வருவதையும் நாம் காண்கிறோம்.
இலங்கையில் இன்று முப்படைகளின் தளபதியாக பெயரளவில் மஹிந்த ராஜபக்ஷ விளங்கினாலும் இராணுவத்தை தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்னவோ கோத்தாதான். இந்நிலையில் பாதுகாப்பு செயலாளர் என்ற நாட்டின் பொறுப்புமிக்க பதவியை சண்டித்தனமாகவும், அனுபவமற்ற முறையிலும் கையாளும் கோத்தபாயா போன்ற நபர்களிடம் தொடர்ந்தும் விட்டுவைப்பது நாட்டை அதள பாதாளத்துக்கள் கொண்டுபோயே தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எமது நாட்டுக்கு எதிராக பல்வேறுபட்ட அழுத்தங்கள் வந்த போதிலும், அவற்றை முழுமையாக அலட்சியம் செய்து தமது அடக்குமுறையை ராஜபக்ஷ அரசு செய்து வருகிறது. தனது சகோதரர்கள் குறிப்பாக கோத்தபாயா மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்ட இந்த சம்பவத்தைக்கூட மஹிந்தா வெட்கமின்றி மௌனமாக பார்த்து வருகிறார்.
இந்த அவல நிலை நாட்டில் தொடருவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது. எத்தனை சமூகச்செயற்பாட்டாளர்கள் பலியெடுக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் சமூகத்தின் பொறுப்புமிக்க அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த காட்டுமிராண்டித்தனமான ஆட்சி முறையை எதிர்க்க வேண்டும். கோத்தபாயா போன்றோரை அவர்களது பதிவிலிருந்து இறக்கி சமூகக்களத்தில் அவர்கள் இயங்கவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட வேண்டும். ராஜபக்ஷ குடும்பத்தின் கோட்டம் வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியான அழுத்தங்களினூடாகவும் எந்தத்தகுதியுமற்ற இவர்கள் அரசியல் வாழ்க்கையிலிருந்தே ஒதுக்கப்படவேண்டும். அப்போதுதான் ஊடகத்துறை மாத்திரமல்ல ஒரளவுக்கேனும் நாகரீகமான சிவில் சமூக வாழ்க்கை இலங்கையில் தொடர வாய்ப்பிருக்கிறது.
Post a Comment