மஹிந்த - ஹக்கீம் முக்கிய பேச்சு, முஸ்லிம் காங்கிரஸும் கூடுகிறது
உதயன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதைத் தீர்மானிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று அவசரமாக நடத்தவுள்ளார்.
அரசுக்கு வழங்கிவரும் ஆதரவை வாபஸ்பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டுமென்று கட்சி உறுப்பினர்கள் விடுத்துவரும் வேண்டுகோள் வலுவடைந்துவரும் பரபரப்பான சூழ்நிலையில், இந்தக் கூட்டம் கூட்டப்படுகின்றது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாணசபையின் மு.கா. முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
"இன்று இந்த ஆட்சியாளர்களால் முஸ்லிம் சமூகம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகிறது. பதவி பட்டங்களா, சமூகமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் சமூகத்திற்குத் துரோகமிழைத்தவர்களாக அடையாளம் காணப்பட்டுவிடக் கூடாது. எனவே, கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நன்மை கருதித் தலைவர் சரியான தீர்மானத்தை எடுப்பாரென நம்புகிறோம்'' என்று முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
"மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் முஸ்லிம் முதலமைச்சர் பதவி என்பன தொடர்பில் அரசின் உறுதியான பதில் எமக்குத் தேவை. வெறும் வாய்மொழி உறுதிகளை நம்புவதற்கு நாம் இனியும் தயாரில்லை. பதவிகளுக்காக அரசில் இருப்பதா, சமூகத்தின் நன்மைக்காக வெளியேறுவதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது.
கிழக்கில் மட்டுமல்ல, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸ் என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதனையே எதிர்பார்த்து நிற்கின்றது'' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி நடைபெறும் இன்றைய கூட்டத்தின் பின்னர் கட்சியின் தீர்மானங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்தவுடன் முக்கியம்மிக்க சந்திப்பொன்றை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

என்னை பொருத்தமட்டில் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் பொதுவான ஒரு சின்னத்தில் போட்டி இடுவதுதான் சிறுபான்மை சமூகங்களுக்கு நல்லது இல்லாவிட்டால் மகிந்தாவின் சிந்தனையையும்,அவரது விசுவாசிகளின் எதிர்பார்பார்ப்பையும் இன்ஷா அல்லாஹ் எவராலும் தடுக்க முடியாது.
ReplyDelete