பேரம்பேசும் வலிமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் - அமைச்சர் றிசாத் வலியுறுத்து
இர்ஷாத் றஹ்மத்துல்லா
எமக்கிருக்கின்ற அரசியல் பலத்தை பலகீனப்படுத்தும் கைங்கரியங்களால் ஒரு போதும் எமது இலக்கை அடைந்து கொள்ள முடியாது. மாற்றமாக ஒட்டு மொத்த சமூகத்தின் பலன்களையே எமது முதலீடாக செய்ய வேண்டும். அப்போது தான் நாம் பேரம் பேசும் வலிமையை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் பிரதேச செயலகத்தின் உப-அலுவலகத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தோப்பூர் பிரதம அமைப்பாளரும்,ரஸ்ஸாக் பவுன்டேஷன்; நிறுவனத்தின் தலைவருமான அஷ்ஷேய்க் அப்துல் றஸ்ஸாக்(நளீமி) தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் போது,
திருகோணமலை மாவட்ட மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளால் துவண்டுவருகின்றனர். இந்த பிரச்சினையானது இந்த மக்களின் எதிர்கால அபிவிருத்திக்கு பெரும் தடையாக இருக்கின்றது. இந்த தடைகளை நாம் அகற்ற வேண்டும் என்றால், அதிகாரம் பெறுபவர்கள் செயற்திறமையும், சமூகப் பற்றும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.தேர்தல் வாக்குகளை அபகரித்துக் கொண்டு இந்த மக்களை வறுத்தியும்,அவர்களது எதிர்பார்ப்புக்களையும் துவம்சம் செய்யும் வேலைகளை செய்ய முடியாது.
.
இம்மாவட்டத்தில் மக்கள் பிரதி நிதிகளாக இருந்தவர்கள்,இருக்கின்றவர்கள் வெறும் பதவிகளை நாமமாக சூட்டிக்கொண்டு இருப்பதற்காக மக்கள் வாக்குகளை அளிக்கவில்லை. இம்மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் வாழும் கிராமங்களுக்கு விஜயம் செய்து அம்மக்களுடன் கலந்துரையாடல்களை செய்து பார்க்கின்ற போது அடிமட்டத்தில் இலகுவாக தீர்க்கப்பட வேண்டியதை கூட செய்யாமல் மக்களை ஏமாற்றிவந்துள்ளதை கானுகின்றோம். மக்கள் எமக்கு அமானிதமாக தந்த பதவிகளை அவர்களத எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தாது போவது பெரும் அநியாயமாகும்.
.
இம்மாவட்டத்தில் மக்கள் பிரதி நிதிகளாக இருந்தவர்கள்,இருக்கின்றவர்கள் வெறும் பதவிகளை நாமமாக சூட்டிக்கொண்டு இருப்பதற்காக மக்கள் வாக்குகளை அளிக்கவில்லை. இம்மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் வாழும் கிராமங்களுக்கு விஜயம் செய்து அம்மக்களுடன் கலந்துரையாடல்களை செய்து பார்க்கின்ற போது அடிமட்டத்தில் இலகுவாக தீர்க்கப்பட வேண்டியதை கூட செய்யாமல் மக்களை ஏமாற்றிவந்துள்ளதை கானுகின்றோம். மக்கள் எமக்கு அமானிதமாக தந்த பதவிகளை அவர்களத எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தாது போவது பெரும் அநியாயமாகும்.
தோப்பூர் மக்களின் நீண்டகால முயற்சி இன்று அதனது பலனை பெற்றுக் கொடுத்துள்ளது.உப-பிரதேச செயலக அலுவலகம் என்பது இம்மக்களது நிர்வாக கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு பிரதானதொன்றாகும். இங்கு பணியாற்றும் அதிகாரிகள் மக்களின் தேவைகளை பெற்றுக் கொடுக்க வழி ஏற்படுத்த வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தலை நிமிர்ந்த சமூகமாக வாழ வேண்டும். அவர்களது பிரச்சினைகள் இனம் காணப்பட வேண்டும். அதனை வைத்துக் கொண்டு பொட்டனி வியாபாரிகளை பேன்று தேர்தல்காலங்களில் மட்டும் வந்து உசுப்பேத்தி உணர்ச்சிகளை தூண்டி அதில் லாபம் பெற்றுவிட்டு போனர்வர்கள் மீண்டும் இங்கு வருவார்கள்,அவர்களை இனியும் நம்பி ஏமாந்து தமது அரசியல் தலைவிதியினை பாதாளத்துக்குள் தள்ளிவிடும் நிலையினை ஏற்படுத்தி கொள்ளக் கூடாது.
இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று இந்த நாட்டு மக்களது உரிமை போராட்டத்திற்கு தம்மை தியாகம் செய்துள்ளது. எந்த பிரதேசத்தில் ஒரு சமூகத்திற்கு அநியாயம் இழைக்கப்படுகின்றதை அறிந்தால்,அதனது நியாயத்துக்காக தமது செயற்பாடுகளை விரித்துவருகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் இழந்தவைகள் ஏராளம். கடந்த 30 வருட யுத்தம் ஏற்படுத்தியது அதிகம். அதனை நாம் திட்டமிட்ட முறியல் பெற்றுக் கொள்ளும் நல்லதொரு சந்தரப்பம் ஏற்பட்டுவருகின்றது. அதற்கு தமது மக்களைப்ற்றி சிந்ததிக்கும் அருகிலுள்ளரவர்கள் தலைமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்பது எமது கட்சியின் எதிர்ப்பார்ப்பாகும். அதற்கு தோப்பூர் மக்கள் அடையாளப்படுத்தியுள்ள அப்துல் ரஸ்ஸாக் பொறுத்தமானவர் என்பதை இங்கு கூடியுள்ள மக்கள் சாட்சியாக இருக்கின்றீர்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட தோப்பூர் உப-பிரதேச செயலகத்தின் சேவைக்காக பொன்னாடை போரத்தி கௌரவிப்பும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,எம்.எஸ்.சுபைர், கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,கிண்ணியா நகர முதல்வர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப்,புத்தளம் மாவட்ட அமைப்பளார் அலி சப்ரி,அம்பாறை மாவட்ட அமைப்பாளர் யஹ்யாகான் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
yes it is true, but how to do that? In that situation, who is going to lead the unity? Everybody wants the leadership. Do you ready to to work under another person? Or will others be ready? who is going to initiate this?
ReplyDelete