Header Ads



கிழக்கு மாகாண சபை தேர்தல் - அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கூடுகிறது

கிழக்கு மாகாண சபை தேர்தலில் இம்முறை முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்படுவாரென்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இணைப்பாளர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் ,தெரிவிததுள்ளார்.

கட்சியின் அதியுயர் பீடக் கூட்டம் நாளை வியாழக்கிழமை மாலை கொழும்பில் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளை இடம் பெறும் கூட்டம் மிகவும் முக்கியமானதொன்றும் என்றும் அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பொதுஜன ஜக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் தமது கட்சி கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.

வடமாகாண தேர்தல் அடுத்த வருடம் இடம் பெறவுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ள நிலையில் கிழக்கு தேர்தல் குறித்து என்ன கூறுகின்றீர்கள் என்று  கேட்ட போது,வடக்கை பொறுத்த வரை தமிழர் ஒருவர் தான் முதலமைச்சராக வரமுடியும்,அவ்வாறு வருவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,உதாரணமாக யாழ் மாநகர சபையின் தலைவராக தமிழர் ஒருவரும்,பிரதி தலைவராக முஸ்லிம் ஒருவரும் இருப்பது போன்று வடமாகாணத்தில் அந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

கிழக்கை பொறுத்த வரையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்க படியால் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பெரும்பன்மையாக சமூகம் சிறுமைப்படுத்த முடியாது என்பதற்கினங்க கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி உறுதியுடன் இறுப்பதாகவும் கூறினார்.

சக முஸ்லிம்கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக அறியக் கிடைக்கின்றது இது குறித்து எ்னன  சொல்கின்றீர்கள். எமது கட்சி இது வரைக்கும் உத்தியோக பூர்வமாக இதுவரைக்கும் எவருடனும் கலந்துரையாடல்களை நடத்தவில்லை.அரசாங்கத்தில் அங்கம் கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகள் எம்முடன் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக அறியமுடிக்கின்றது. அவர்கள் பேச்சுக்கு வந்தல் நாமும் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்றும கட்சியின் தேசிய இணைப்பாளர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,தெரிவித்துள்ளார்


1 comment:

  1. what's the right name of our party
    All Ceylon muslim congress or
    All ceylon makkal congress

    ReplyDelete

Powered by Blogger.