Header Ads



புத்திசாலித்தனமான முடிவு - முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை வரவேற்கிறார் சம்பந்தன்

TM

ரமன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முஸ்லிம் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

'முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் எடுத்திருக்கும் முடிவை நாங்கள் வரவேற்கின்றோம். இறுதியாக ஏமாற்றப்படாது இப்போதே அவர்கள் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் பேசும் இனத்தின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும் வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்திற்கும் இந்த முடிவு சிறப்பானதொன்றாக அமையுமென நாங்கள் நம்புகின்றோம். தமிழ் பேசும் மக்களை மதிக்காத, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசாங்கத்திற்கு துணைபோகாமல் இருப்பதென்று முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்' என்று மேலும் கூறினார்.

1 comment:

  1. தாங்கள் களமிறக்கும் முஸ்லிம் வேட்பாளர்களை உடனடியாக பட்டியலில் இருந்து அகற்றவும்.

    ReplyDelete

Powered by Blogger.