மௌன கொலையாளி..!
இன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் பத்தில் ஒருவருக்கு ஹையர் டென்சன் எனப்படும் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் இரத்த அழுத்த நோயானது மௌனமாக இருந்து ஆளைக் கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் இரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயப் பாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைக்கு பெரும்பாலானோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு இரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹோர்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகி
றது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன்காரணமாகவே உடலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.
உடலில் பிரச்சினைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹோர்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் பதற்றம் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டு போய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப் பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலட்டாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகளே உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
குழந்தைகள் பேர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப்படுத்தலாம்.
Post a Comment