Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தில் பதற்றம்

sfm

கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடம் கட்சியின் தலைமையகமான தாருஷலாமில் தற்போது இடம்பெற்று வரும் இந்த கூட்டத்தில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.

கிழக்கு தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்னவே தீர்மானித்திருந்தது. எனினும் இது தொடர்பான ஆவனத்தில் கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி கைச்சாத்திட மறுத்ததைத் தொடர்ந்து, இன்றைய அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கட்சியின் பிரதி பொது செயலாளர் நிஷாம் காரியப்பர் உள்ளிட்ட சில உறுப்பினர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து, சுயேட்சையாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழுவினரே நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். எனினும் இந்த பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் இந்த நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய அரசியல் உயர் பீட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

கட்சியில் தற்போது காணப்படுகின்ற நெருக்கடியான நிலையை தணிக்கும் பொருட்டு, ஏற்கனவே அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவித்த தீர்மானத்தை கைவிட்டு, தனித்து போட்டியிடும தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

2 comments:

  1. ஜமீல் அய்யா அடித்துச் சொன்னாரே கட்சியில் அப்படி ஒரு பிழவோ பிரச்சினையோ இல்லை என்று..... அப்போ இப்போ எப்படி ஒரு பதட்ட நிலை, கட்சியில் தடுமாற்றம்.... பய்யன் ஜமிலுக்கு தேர்தலில் சீட் ஒத்துக்கா விட்டால் தெரியும் அவரின் கோர முகம்..... சென்ற தேர்தல் பிரச்சினையில் கூட இந்த ஜமிலும் ஜவாதும் சேர்ந்துதானே மகிந்தவுடன் கள்ள பாய்ச்சல் பாய ரகசிய பேச்சு பேசின ஆட்கள்.....

    ReplyDelete
  2. சின்னப் பொடியன் ஜெமீல் கூறியதை பொருட்படுத்தாதீர்கள்...SLAHY...

    ReplyDelete

Powered by Blogger.