Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எச்சரிக்கை..!

TL

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட வேண்டும் இல்லையேல் தனித்துப் போட்டியிட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன் இணைந்து போட்டியிடுமாறு அழைக்க வேண்டியது தங்களின் கடமையெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினமும் பாராளுமன்றத்தில் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன், பி.அரியநேத்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றினர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், பொது செயலாளர் ஹசன்அலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திசாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசுகையில்,

அரசியல் தீர்வு தனித்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, மாறாக தமிழ் பேசும் மக்களுக்கானது. அரசியல் தீர்வு கிடைக்கும் எனினும் என்ன ரீதியில் கிடைக்குமென தெரியாது. இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்காதுள்ளது. குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதானது. அதற்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றுவதாக அமைந்து விடும் இது வரலாற்று துரோகமாக பொய் முடியும் நீங்கள் அரசாங்கத்துடன் இருக்கின்ற போதும் நீங்கள் நினைப்பதை அடைய முடிந்ததில்லை.

எனவே எம்முடன் இணைந்து போட்டியிட வேண்டும். இல்லையேல் தனித்து போட்டியிட வேண்டும். எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு முட்டுக்கொடுக்க வேண்டாமென கேட்கின்றோம். எமக்கு எம்முடன் போட்டியிடுமாறு கேட்க வேண்டிய ககடமையும் உரிமையும் உள்ளது. எதிர்காலத்தில் எம்மை அழைக்கவில்லையென குற்றம்சாட்டக் கூடாöத்பதற்காகவே இந்த அழைப்பை விடுக்கின்றேனென பேசியதாக பேச்சில் ஈடுபட்ட வட்டாரங்கள் தெரிவித்தார்.

4 comments:

  1. இன, மத பேதங்களை விட்டு சிறுபான்மை கட்சிகள் ஒன்று சேர்வதே நன்று ! ரா.சம்பந்தனின் முடிவு சரியே.

    ReplyDelete
  2. முதல கண்ணீர் வடிக்கிறதோ அதென்ன தமிழ் பேசும் மக்களுக்கு ஆனா தீர்வு??? முஸ்லிம்களுக்கு தமிழ் மட்டுந்தான் தெறியும் என்ற நினப்பா??? தமிழே அறியாத ஆயிரகணக்கான முஸ்லிம் இளம் மாணவர்கள் இப்போது கிழக்கிலும் மத்திய கிழக்கிலும் வாழ்கிறார்கள்!!!
    உண்மையில் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டி இட்டாலே அது தன் தலையில் தானே மண்ணை போட்டு கொண்ட மிக பெரிய மடதனமாக அமையும் மேலும் தென் இலங்கையின் குக்கிராம முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழும் சமாதான சகவாழ்வுக்கும் குந்தகமாக இருக்கும் தமிழருடன் முஸ்லிம்கள் சேர்ந்தால் நிச்சயமாக நாம் புலி ஆதரவு சக்திகளுக்கு துணை புறிந்து நாட்டின் பிரிவினைக்கி உதவி புறிவதாகவே சிங்கள மக்கள் நோக்குவர் தமிழ்ரை முதல் அமைசர் ஆக்கினால் முழு உலகமுமே கிழக்கிலும் தமிழரே பெரும்பான்மை சக்தி என்பதை நம்பி விடும்

    ReplyDelete
  3. bro fashlin சொல்வது சரி ஆனாலும். சிறுபான்மையின் பிரச்சினய்களை தீர்த்து வைக்க அரசாங்கம் வெளிப்படயாஹா தவறியுள்ள இந்த சந்தரபபதில், அரசுடன் சேர்ந்து போட்டி இடுவதும் தலையில் மண்ணைவாரி போட்டுகொள்வது போன்றதே . so SLMC தனித்து போட்டியிடுவது or எழுத்துமுலமான உடன்படிக்கை உடன் அரசுடன் சேர்வதே சிறந்தது. தமிழ் கூட்டமைப்புடன் சேர்வது தமிழ் , முஸ்லிம் இரு சமுஹங்களுக்கும் நன்மை தரப்போவதில்லை

    ReplyDelete
  4. முதலில், நாம் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை என்பதற்கு அப்பால், இந்த தமிழ் கூட்டணி என்பவர்கள் மாற்று கட்சிக்காரர்களை தம்மோடு இணைந்து போட்டியிட வாருங்கள் என்று அழைக்க அவர்கழுக்கு தார்மீகக் கடமை உள்ளதே தவிர இல்லையேல் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்று கட்டழை இட இந்த தமிழ் கூட்டணிக்கு எந்த அருகதையும் இல்லை என்பது எமது திடமான நம்பிக்கை.

    ReplyDelete

Powered by Blogger.