சூரியனில் புயல் - சனிக்கிழமை பூமியை தாக்குகிறது
சூரியனில் ஏற்பட்டுள்ள புயல் இன்று சனிக்கிழமை காலை, பூமியை தாக்க உள்ளது.சூரியனில் ஏற்படும் புயலால் தீ சுவாலைகள் பல ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு பரவி எரியும். இதனால், விண்துகள் வெப்பமாகி சூரிய காந்தப் புயலாக பூமியைத் தாக்குகிறது.
இந்த வகையில் தற்போது சூரியனின் கீழ் மத்திய பகுதியில் வலுவான புயல் தோன்றியுள்ளது. இது வினாடிக்கு 1,400 கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை, 10.20 மணிக்கு இது புவிகாந்த மையத்தைத் தாக்குகிறது. எனினும் இதனால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 6ம் தேதி, இதே போன்ற சூரிய புயல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment