இந்தியாவில் தீவிரவாத வேட்டையின் பெயரால் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்
தீவிரவாத வேட்டையின் பெயரால் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தும் தாக்குதல்களை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும், பல்வேறு தளங்களில் பணியாற்றுவோரும் இணைந்து டெல்லியில் வருகிற ஜூலை 9-ஆம் தேதி மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். புதுடெல்லி கான்ஸ்ட்யூஸன் க்ளப்பில் வைத்து இம்மாநாடு நடைபெறும்.
“சிறுபான்மையின மக்களுடன் இந்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறைகளையும், அடக்குமுறைகளையும் குடிமக்கள் அடையாளம் கண்டுள்ளனர். சொந்த வீடுகளில் கூட பாதுகாப்பில்லாத சூழலில் வாழும் அவர்கள் ஒன்றிணைந்து அநீதிக்கும், அரசு பயங்கரவாதத்திற்கும் எதிராக குரல் எழுப்ப மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளனர்” என்று மாநாட்டு அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகின்றனர்.
தேசப் பாதுகாப்பின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதும், சித்திரவதைச் செய்வதும் மிகவும் அதிகரித்து வருகிறது. எவ்வித விளக்கமும் அளிக்காமல் முஸ்லிம் இளைஞர்களை கஸ்டடியில் எடுத்து சித்திரவதைச் செய்வதும், விசாரணையில்லாமல் அவர்களை சிறையில் அடைப்பதும் நடைபெற்று வருகிறது. அவர்களில் பலரும் கஸ்டடியில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் கடைசி பலிகாடா தான் அண்மையில் புனே எரவாடா சிறையில் கொலைச் செய்யப்பட்ட கத்தீல் சித்தீகி ஆவார்.
கடந்த நவம்பரில் கைது செய்யப்பட்ட கத்தீல் சித்தீகி பலத்த பாதுகாப்பு மிகுந்த சிறை அறையில் வைத்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். அதில் உள்ள மர்மங்கள் இன்னும் விலகவில்லை. அதைப்போல கடந்த மே 13-ஆம் தேதி சவூதி அரேபியாவின் ஜுபைலில் இருந்து கைது செய்யப்பட்ட ஃபஸீஹ் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தூது
Post a Comment