மலையக தமிழ் கட்சிகளிடம் பாடம் கற்கவேண்டிய முஸ்லிம் கட்சிகள்
சபரகமுவ மாகாணத்தில் உள்ள கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள கணிசமான தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கவிடாமல் அங்கு நீண்டகாலத்துக்குப் பின்னர் தமிழ்ப் பிரதிநிதித்துவம் ஒன்றை உருவாக்குவது தான் தமது நோக்கம் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியில் பங்காளிக் கட்சியாக இருக்கின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிரணியில் இருக்கின்ற மனோ கணேசன் தலைமையிலான கட்சியுடன் கூட்டுசேர்ந்து போட்டியிடுவது பற்றி அரசாங்கத்துக்கு தான் விளக்கமளித்துவிட்டதாகவும் அந்த விளக்கத்தால் அரசாங்கம் திருப்தியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் மேலும் கூறினார்.
சபரகமுவ மாகாணத்தில் தமிழர்களின் கல்வி மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்வதற்கு அங்கு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பது அவசியப்படுகின்றது என்றும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளை ஓரணியில் இணைத்து போட்டியிட வைப்பதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தன. இருந்தபோதும் அம்முயற்சி எதிர்பார்த்த பலன் தரவில்லை என்பதுடன், தற்போது அநேக முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் சங்கமித்துள்ளன. இதனால் முஸ்லிம் கட்சிகளை ஓரணிசேர்க்கும் முயற்சியும் தோல்வி கண்டுள்ளது எனலாம். எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் விருப்புகளுக்கு ஏற்ப செயற்படும் துர்ப்பாக்கியமும் முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசின் பிரித்தாளும்,கொள்கையால் சகலரும் மாட்டிகொள்வார்கள்.தேர்தலுக்கு பின் ஆறுமுகம் குட்டயெய் குழப்புவார்.நமதுதலைமைகள் இப்படி போவதற்கு நாம் இறைவனிடம் கை ஏந்து வதை தவிர வேறு வலி இல்லை.முயற்சிக்கு கூலி உண்டு
ReplyDelete