முஸ்லிம் காங்கிரஸ் மற்றுமொரு பிளவை தாங்குமா..? சிலர் பல்டி அடிக்க தயார்..!
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தமது வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஷ் தமது கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதாக அறிவித்ததை அடுத்தே இந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷின் உறுப்பினர்கள் சிலர் அதிலிருந்து விலகி எதிர்கட்சி அரசியல் கட்சிகளுடன் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட தீரமானிக்கும் பட்சத்தில் இந்த முடிவெடுக்கப்படும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் கீழ் போட்டியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷின் பிரசார செயலாளர் நிஷாம் காரியப்பர் உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஷின் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி தொகுதி அமைப்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையாது தனித்துப் போட்டியிட்டால், சிலர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாகவும் அறியவருகிறது.
Post a Comment