முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்துங்கள் - முஸ்லிம் கவுன்ஸிலிடம் கோரிக்கை முன்வைப்பு
முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் செயற்பாட்டில் முஸ்லிம் கவுன்ஸில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்தியப் பேராசிரியை பாத்திமா முஸபருக்கு பிரதியமைச்சர் பஸீர் சேஹு தாவூத் தனது வீட்டில விருந்துபசாரம் வழங்கினார். இதன்போது முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீனிடம் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பஸீர் சேஹு தாவூத் வலியுறுத்தியுள்ளார். இதன்போது அருகிலிருந்த முஸ்லம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்திற்கு தனது விருப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை முஸ்லிம் கட்சிகள் ஒரேகுடையின் கீழ் செயற்படுவதே தமது நோக்கமென யாழ் முஸ்லிம் இணையத்திற்கு கருத்து வெளியிட்ட என்.எம். அமீன், எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலாவது முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு, முஸ்லிம் முதலமைச்சரை வென்றெடுக்க உபாயங்கள் வகுத்துச் செயற்படுவது அவசியமென சுட்டிக்காட்டினார்.
Post a Comment