Header Ads



மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு கடற்தொழில் செய்ய இடம் ஒதுக்கீடு

மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு மன்னார் சங்குபிட்டி பிரதான வீதியில் உள்ள தள்ளாடி படைத்தளத்திற்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் கடற் தொழில் செய்வதற்கான இடம் தற்காளிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.மோகநாதன் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டி மேல், மன்னார் மாவட்ட கடற் தொழில் உதவிப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி சங்கங்களின் தலைவர்கள், உப தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் கோந்தைப்பிட்டி மீன் பிடி இறங்கு துறை முகப்பகுதியில் ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் இரண்டு மீனவ சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட முருகல் நிலை இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் குறித்த அசாதாரண சூழ்நிலையை தனிக்கும் முகமாகவும், ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு தற்காலிகமாக கடற்தொழிலில் ஈடுபட மாற்று இடம் வழங்கும் முகமாகவும் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள அதிகமான மீன்பிடி சங்கங்கள் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு தொழில் செய்வதற்கு இடம் வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இங்கு கலந்து கொண்ட அணைவரினதும் கோரிக்கைகளுக்கு அமைவாக மன்னார் ஜோசப்வாஸ் நகர் மீனவர்களுக்கு தற்காலிகமாக தொழில் செய்வதற்கு மன்னார் சங்குபிட்டி பிரதான வீதியில் உள்ள தள்ளாடி படைத்தளத்திற்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் கடற் தொழில் செய்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
 

No comments

Powered by Blogger.