முஸ்லிம் உலகம் மௌனம் - உயிர்வாழ ஏங்கும் மியன்மார் முஸ்லிம்கள்..!
மியன்மார் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகாமிற்கு அவர்களை அனுப்புவோம் என்றும் மியான்மர் அதிபர் தைன் ஸைன் அறிவித்துள்ளார். 10 லட்சம் எண்ணிக்கையிலான ரோஹிங்கியா முஸ்லிம்களை இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஐ.நா அகதி முகாமிற்கு அனுப்புவதே தங்கள் முன்னால் உள்ள ஒரே வழி என்று ஸைன் கூறுகிறார்.
ஆனால், மியான்மரின் கோரிக்கையை ஐ.நா அகதிகள் ஏஜன்சி அங்கீகரிக்கவில்லை. பல தசாப்தங்களாக மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் அரசு கடுமையான பாரபட்சத்தை காண்பிப்பதாகவும், கல்வி கற்கவோ, வேலை தேடவோ வாய்ப்புகளை அளிக்காமல், பயண தடைகள் உள்பட கடுமையான கட்டுப்பாடுகளை அரசு இவர்கள் மீது சுமத்துவதாகவும் ஐ.நா குற்றம் சாட்டுகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கிடையே மியான்மரில் நடந்த பல்வேறு இனக்கலவரங்களும், அரசு நடத்தும் ஒருதலை பட்சமான அடக்குமுறைகளும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து புலன்பெயரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல தசாப்தங்களாக நாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்ட ரோஹிங்கியா முஸ்லிம்களை, தங்களுடைய குடிமக்கள் அல்ல என்று சர்வாதிகார மியான்மர் அரசு கூறுகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை அங்கீகரிக்க முடியாது என்று மியான்மர் அரசு திமிராக கூறிவருகிறது.
குறிப்பு - மியன்மார் முஸ்லிம் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் குறித்து இலங்கை முஸ்லிம்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு, உயிருக்காக போராடும் அந்த உறவுகளுக்காக குறைந்தபட்சம் பள்ளிவாசல்களில் பிரார்த்தனையாவது செய்யுமாறும் எமது இணையமானது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் சிலருக்கும், உலமாக்கள் சிலருக்கும் ஈமெயில் மூலமாக அறிவித்தது. எனினும் துரதிஷ்டவசமாக அவர்களிடமிருந்து இதுவரை எமக்கு எத்தகைய பதிலும் கிட்டவேயில்லை...!!
@jaffnamuslim
ReplyDeleteplease send this msg to ALJU and this sad news should remind on coming fri day in all Musjid .....Inshallah
O Allah please give your aid soon for Burma Muslim..
Jamiyathul Ulama safai kooda ithanai kandu kollavillaiye, Allahu Akbar
ReplyDelete