Header Ads



பௌத்தர்களிடம் அரசாங்கத்திற்கு செல்வாக்கு - அமெரிக்கா, இந்தியா எதுவும் செய்யமுடியாது


அமெரிக்காவாலும், இந்தியாவாலும் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என பிரித்தானியாவின் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பேராசிரியிர் ஹார்ஸ் வீ பென்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.

'த வொசிங்கடன் டைம்ஸ்' சஞ்சிகை வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பிலான பிரதி ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே தீர்மானித்து வைத்துள்ளது. அதற்கு இலங்கையில் பௌத்த மக்களிடையே அதிக செல்வாக்கு காணப்படுகிறது.  இந்த நிலையில், அமெரிக்காவோ, இந்தியாவோ சொல்வதை கேட்க வேண்டும் என்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை.

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏதும் தேவையாக இருந்தால், அரசாங்கம் சீனாவை நாடி செல்கிறது. எனவே இலங்கை மீது அமெரிக்காவும், இந்தியாவும் அழுத்தம் கொடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.