செய்யித் குதூபின் சகோதரி பிரான்ஸில் வபாத்தானார்
இஹ்வான் தமிழ்
ஹமீதா குதுப் 1937 ஆம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார். இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததற்காக 1965 ஆம் ஆண்டு சிறைப்பிடிக்கப்பட்டார். அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 29 ஆகும். அத்தோடு செய்யித் குதுபிடமிருந்து தகவல்களையும் குறிப்புகளையும் ஸைனப் அல் கஸ்ஸாலிக்கு நகர்த்தினார், 1954 – 1964 காலப்பபகுதிகளில் சிறைக் கைதிகளின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் சபைக்கு ஒத்துழைப்பு வழங்கினார் எனும் குற்றச் சாட்டுக்களும் அவர்மீது சுமத்தப்பட்டன.
கொடுமை நிறைந்த இராணுவ சிறையில் 6 வருடங்களையும் 4 மாதங்களையும் கழித்த ஹமீதா குதுப் அவர்கள் சிறையிலிருந்து வெளியேறிய பின் கலாநிதி ஹம்தீ மஸ்ஊத் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதோடு அவருடன் பிரான்ஸ் சென்று வாழ்ந்தார்கள்.
ஹமீதா குதுப் அவர்கள் பல நுால்களை எழுதியுள்ளார். அவற்றுள் ”இரவின் வனாத்தரங்களில் ஒரு பயணம்”, ”ஒரு பால்யகால படிப்பினை” என்பவை முக்கியமானவையாகும். ஷஹீத் செய்யித் குதுப் அவர்களுக்கு மொத்தம் 4 சகோதர, சகோதரிகள். பெரும் எழுத்தாளர் முஹம்மத் குதுப், நபீஸா, ஆமினா, ஹமீதா போன்றோரே அவர்களாவர்.
அஷ் ஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் இளைய சகோதரி ஹமீதா குதுப் நேற்று பிரான்ஸில் வபாத்தானார்கள். இஸ்லாத்திற்கு பணிவிடை செய்வதில் தனது முழு வாழ்வையும் செலவு செய்த ஹமீதா குதுப் அவர்களுக்கு வபாத்தாகும் போது வயது 75 ஆகும்.

Post a Comment