Header Ads



யானையின் தாக்குதல் - முஸ்லிம் சகோதரர் பரிதாபமாக வபாத்

கட்டுக்கெலியாவையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று கல்கிரியாகம பொலிஸ் பிரிவிலமைந்துள்ள ‘கோண்பலயாகம’ பகுதியில் சனிக்கிழமை இடம் பெற்றிருப்பதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

கலாவௌ  கோண்பலயாகம பாதுகாப்பு வனப் பிரதேசத்தில் தடிகள் வெட்டுவதற்காக நண்பர்கள் இருவருடன் சென்றிருந்த வேளையில் அங்கு வந்த காட்டு யானையைக் கண்டு இருவர் தப்பியோடிய அதேவேளை, ஜே. எம். நழீம் (28 வயது) என்பவரே ஓடிச் சென்று மாமரமொன்றில் ஏறியுள்ளார். அந்த மரத்தை அசைத்து வீழ்த்திய யானை அம்மரத்திலேயே அவரை தாக்கிக் கொன்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் பின்னர் குறித்த யானை பலளுவௌ பிரதேசத்திற்குச் சென்றிருப்பதாகவும் பலளுவௌ பிரதேச மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். கல்கிரியாகம பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.