காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா (படம்)
பாஸி பஹ்ஜான்
1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் புதிய நிருவாகக் கட்டிடம் தென்கிழக்கு பல்கலைக்கழக அறபு 'இஸ்லாம் கற்கைத் துறை பீடாதிபதியும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அலியார் ரியாதியினால் வைபரீதியாக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு 'வெளிநாட்டு கொடைவள்ளல்கள்'நிறுவனங்களின் தாராள உதவி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் புதிய நிருவாகக் கட்டிடம் 07-10-2000 அடிக்கல் நடப்பட்டு 20-07-2012 நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டிட திறப்பு விழாவில் உலமாக்கள் கா-குடி சம்மேளன உறுப்பினர்கள் 'நலன்விரும்பிகள் 'ஊடகவியலாளர்கள்'ஊர் பிரமுகர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
1990ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் தஃவா வழிகாட்டல், கல்வி கற்பித்தல் மற்றும் மனிதாபிமான வாழ்வாதார உதவிகள் என பல்வேறு பணிகளையும்' சேவைகளையும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment