'முஸ்லிம் உம்மத்தின் முன்மாதிரி முஹம்மது முர்ஸி' - துருக்கி பிரதமர் புகழாராம்
எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முஹம்மது முர்ஸி மகத்தான முன்மாதிரியாக திகழ்கிறார் என துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் புகழாரம் சூட்டியுள்ளார். முஸ்லிம் உம்மத்தில்(சமூகம்) இளைஞர்கள் முர்ஸியை முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும். சோசியல் நெட்வர்க் தளமான பேஸ்புக்கில் எர்துகான் தனது கருத்தை பதிவுச்செய்துள்ளார்.
பேஸ்புக்கில் தனது கருத்துடன் முர்ஸியின் போட்டோவையும் எர்துகான் இணைத்துள்ளார். தனது பாதுகாவலர்கள் உள்பட இதர நபர்களுக்கு தலைமை வகித்து முர்ஸி தொழுகை நடத்துவதுதான் அந்த புகைப்படம். இந்த புகைப்படத்தின் கீழ் எர்துகான், “மாஷா அல்லாஹ்” (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே) என அடிக்குறிப்பை எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தின் கீழ் ஒருவர் “நீங்கள் மாஷா அல்லாஹ் என கூறும் அளவுக்கு எந்த ஒரு சிறப்பையும் முர்ஸியிடம் நான் காணவில்லை” என கமெண்ட் கொடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள எர்துகான் இவ்வாறு பதில் கமெண்டை கொடுத்துள்ளார்: “நீங்கள் ஒருவேளை அவரிடம் கண்டிருக்க இயலாது. ஆனால், நான் அவரிடம் பல சிறப்புகளையும் காண்கிறேன். ஒரு நாயகன் என்ற நிலையில் முஸ்லிம் உம்மத் பின்பற்றவேண்டிய மகத்தான முன்மாதிரியாக அவர் திகழ்கிறார்” என கூறியுள்ளார். எர்துகானின் கருத்தை முர்ஸியை ஆதரிக்கும் ஏராளமானோர் வரவேற்றுள்ளனர்.
Post a Comment