இலங்கை சிறுபான்மை சமூகத்தின் வளமான வாழ்வு பற்றி சர்வதேச சமூகத்துக்கு அறியப்படுத்துங்கள்
இலங்கை சிறுபான்மை சமூகத்தின் அமைதியான, வளமான வாழ்வு பற்றி அனைத்துலக சமூகத்துக்கு அறியச் செய்ய வேண்டியது இராஜதந்திரிகளின் பொறுப்பு என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை இராஜதந்திரிகளுக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, போரின் இறுதிக்கட்டத்தில் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்பதற்கு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
“தற்போது எல்லா சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டு, எல்லா வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. எவரும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் - எந்தக் கட்டுப்பாடும் இன்றி பயணம் செய்யலாம். 53 ஆயிரத்துக்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வடக்கிற்கு பயணம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.
அவர்கள் வடக்கு, கிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வு, புனர்நிர்மாணத் திட்டங்களை பார்வையிட்டுள்ளனர். பலாலிப் படை முகாம் தற்போது தேசிய பாதுகாப்புக்கான ஒரு நடவடிக்கையாக மட்டுமே பேணப்பட்டு வருகிறது. அதனைச் சுற்றியுள்ள 17 கிராம அதிகாரி பிரிவுகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மை சமூகத்தின் அமைதியான, வளமான வாழ்வு பற்றி அனைத்துலக சமூகத்துக்கு அறியச் செய்ய வேண்டியது இராஜதந்திரிகளின் பொறுப்பு” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment