செய்தி இணையத்தளங்கள் மீதான புதிய ஒழுங்கு விதிகள் பற்றிய கலந்துரையாடல்
அஸ்லம் எஸ்.மௌலானா
செய்தி இணையத்தளங்கள் மீதான புதிய ஒழுங்கு விதிகள் தொடர்பாக இலங்கை பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை நிறுவன கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9 முதல் மாலை 3 வரை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சகல ஊடக நிறுவனங்களுக்கும் அவற்றின் செய்தி இணையதளங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து செய்தி இணையதளங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
செய்தி இணையத்தளங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் கீழ் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனூடாக சுய ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்தல், வாசிப்பு உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் சரியான அறிக்கைகள் பற்றிய பொறுப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment