Header Ads



அரபு நாட்டு புரட்சி இலங்கையிலும் வேண்டும் - சரத்பொன்சேக்காவின் ஆசை

AD

ஜனநாயக வழிமுறைகளில் அரசாங்கத்தை கவிழ்க்க மக்களின் ஒத்துழைப்புடன் போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரேபியாவில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு கிளர்ச்சியை போன்று இலங்கை மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டுமென சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள், எதிர்கட்சி அடக்குறை என்பவற்றை தடுக்க சர்வதேசம் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சர்வாதிகார ஆட்சி, நீடித்தால் மனித உரிமைகள் மீறப்பட்டால் மக்களை பாதுகாக்க சர்வதேச சமூகம் பங்களிப்பை வழங்க வேண்டுமென சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை எனதொடர் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவைப் போன்று இலங்கையில் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாதென்பது தமது வேண்டுதல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை பெற்றுள்ள தன்னை புலனாய்வுப் பிரிவினர் பின்தொடர்வதாகவும் திருமண விருந்துக்கு சென்றாலும்கூட புலனாய்வுப்பிரிவினர் பின் தொடர்வதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ipadi yosikama pesi pesithan.. ivalu naal ulla iruntharu..

    ReplyDelete

Powered by Blogger.